சிவரஞ்சனி (திரைப்படம்)
சிவரஞ்சனி கனடாவில் உள்ள கலைஞர்களினால் இந்தியக் கலைஞர்களையும் இணைத்து இந்தியாவிலும், கனடாவிலும் படமாக்கப்பட்ட திரைப்படம்.
சிவரஞ்சனி | |
---|---|
இயக்கம் | மதிவாசன் - மூர்த்தி |
தயாரிப்பு | ஜனகன் பிக்ஷர்ஸ் ஸ்ரீமுருகன் |
கதை | குரு அரவிந்தன் |
திரைக்கதை | குரு அரவிந்தன் |
இசை | கபிலேஷ்வர் |
நடிப்பு | அமிர்த கணேஷ் நீதன் கே.ஆர்.வத்சலா கதிர் துரைசிங்கம் கோவை பாபு ஸ்ரீமுருகன் |
ஒளிப்பதிவு | செந்தில்குமரன் |
விநியோகம் | ஜனகன் பிக்ஷர்ஸ் |
நாடு | கனடா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஜனகன் பிக்சர்ஸ் சிறீமுருகன் ஏற்கனவே உயிரே உயிரே,ப்சுகம் சுகமே, புது உறவு போன்ற படங்களை தயாரித்தவர். பிரபல எழுத்தாளரான குரு அரவிந்தன் எழுதிய " உன் மனம் கல்லோடி" என்ற புதினம்தான் இத்திரைப்படமாகியது. திரைக்கதை, வசனம் என்பனவற்றை குரு அரவிந்தனே எழுதியிருக்கிறார்.
இத்திரைப்படத்தில் அமிர்த கணேஷ் (இந்தியா), நீதன் (கனடா), கே.ஆர்.வத்சலா (இந்தியா), ஸ்ரீமுருகன் (கனடா), கோவை பாபு (இந்தியா), கதிர் துரைசிங்கம் (கனடா) முதலான பலர் நடித்திருக்கிறார்கள். இசையை கபிலேஷ்வர் (கனடா) வழங்க, செந்தில்குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்கம் எஸ்.மதிவாசன் - மூர்த்தி இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள்.