சிவாசாரியர்
சிவாச்சாரியார் என்போர் சிவாலயத்தில் பூசை செய்யவும், சிவாலயத்தின் பிரதிட்டை செய்யவும், சிவாலய விழாக்களை செய்யவும் தகுதியுடையோர் ஆவார்கள். இவர்கள் சிவாகம முறைப்படி இதனை செய்கின்றார்கள். இவர்கள் ஆன்மார்த்தம், பரார்த்தம் எனும் இரு வகை பூசை முறைகளை செய்பவர்களாகும்.
இவர்களை சிவப் பிராமணர், சிவபுத்திரர், கர்ம சித்தாந்தக் குரவர் என்ற பெயர்களில் அழைக்கின்றார்கள்.
தோற்றம்
தொகுசதாசிவ முர்த்தியின் ஐந்து முகங்களிலிருந்து கௌசிகர், காசியபர், பாரத்துவாசர், அத்திரி, கௌதமர் என ஐந்து முனிவர்கள் தோன்றினார்கள். இவர்களின் வழி வந்தோர் சிவாச்சாரியார்கள் எனப்படுகிறார்கள்.