சிவானாண்டி ராஜதுரை
சிவானாண்டி ராஜதுரை (Sivanandi Rajadurai) என்ற மைலாடி முனைவர் சி. ராஜதுரை (Mylaudy Dr. S.Rajadurai)[1] வினையூக்கம், இயற்பியல் வேதியியல் மற்றும் உமிழ்வு கட்டுப்பாடு ஆகியவற்றில் ஓர் அறிவியலாளர் ஆவார்,[2] உலகளாவிய சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் இவர் பெருநிறுவன நிர்வாகி ஆவார். இவர் ராஜதுரை அறக்கட்டளையின் தலைவர்.
சிவானாண்டி ராஜதுரை | |
---|---|
பிறப்பு | மைலாடி, கன்னியாகுமரி, தமிழ்நாடு | 1 செப்டம்பர் 1951
பணி | அறிவியலாளர் |
பெற்றோர் | சிவானாண்டி நாடார் தாயம்மாள் |
கல்வி
தொகுஇராஜதுரை மைலாடியில் உள்ள, சிவானாண்டி நாடார் மற்றும் தாயம்மாள் நாடாச்சி ஆகியோருக்கு, செப்டம்பர் 1, 1951இல் மகனாகப் பிறந்தார். இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவசாய கிராமம் மைலாடி ஆகும். கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரியில் கல்லூரி படிப்பினையும், மைலாடியில் உள்ள ரிங்லெட்டாப் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைப் படிப்பையும் முடித்தார். 1969 மற்றும் 1972 க்கு இடையில் நடைபெற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட சொற்பொழிவு போட்டிகளில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றுள்ளார். இவர் பட்டம் பெறும் பிரிவு உபச்சார விழாவில் சொற்பொழிவு ஆற்றினார். கேரள பல்கலைக்கழகத்தின் மார் இவானியோஸ் கல்லூரியில் வேதியியலில் முதுகலை பட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்றார். இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னையில் இயற்பியல் வேதியியலில் துறையில் முனைவர் பெற்ற இவர், ஜே. சி. குரியாக்கோஸுடன் இணைந்து பணியாற்றினார். கலப்பு ஆக்சைடு வினையூக்கிகள் பற்றிய இவரது முனைவர் பட்ட ஆய்வு[3][4] மாசு குறைப்புக்கான திட ஆக்சைடு தீர்வுகளை உருவாக்குவது குறித்த இவரது எதிர்கால ஆராய்ச்சிக்கு வழிகாட்டியது.[5][6][7] இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இருந்தபோது, ராஜதுரை கல்லூரிகளுக்கு இடையே நடக்கிற பளுதூக்குதல் தடகள அணியின் தலைவராகவும் இருந்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dr. S. Rajadurai (alias) Mylaudy Dr. S. Rajadurai". Rajaduraiin.com. Archived from the original on 2015-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-10-06.
- ↑ "Scientist develops system for vehicles". The New Indian Express. 12 January 2010. http://www.newindianexpress.com/states/tamil-nadu/2010/jan/12/scientist-develops-system-for-vehicles-159958.html. பார்த்த நாள்: 3 October 2018.
- ↑ Rajadurai, S. (1987). "Synthesis, structural characterization and catalytic study of ZnCrFeO4 spinel". Materials Chemistry and Physics 16 (5–6): 459–466. doi:10.1016/0254-0584(87)90066-6.
- ↑ Rajadurai, S.; Geetha, T.M. (1986). "Dehydration of ethanol on filtrol and modified filtrols". Materials Chemistry and Physics 15 (2): 173–183. doi:10.1016/0254-0584(86)90122-7.
- ↑ "Nitrous oxide decomposition using a solid oxide solution". freepatentsonline.com. பார்க்கப்பட்ட நாள் 2015-10-28.
- ↑ Rajadurai, S.; Carberry, J. J.; Li, B.; Alcock, C. B. (2010). "ChemInform Abstract: Catalytic Oxidation of Carbon Monoxide over Superconducting La2-xSrxCuO4−δ Systems Between 373-523 K". ChemInform 22 (51): no. doi:10.1002/chin.199151024.
- ↑ Gunasekaran, N.; Rajadurai, S.; Carberry, J. J. (1995). "Catalytic decomposition of nitrous oxide over perovskite type solid oxide solutions and supported noble metal catalysts". Catalysis Letters 35 (3–4): 373–382. doi:10.1007/BF00807194.