சிவார்ச்சனா போதம்
சிவார்ச்சனா போதம் என்னும் நூலைப் பற்றிய குறிப்பு சிவப்பிரகாசம் என்னும் நூலுக்கு 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மதுரைச் சிவப்பிரகாசர் எழுதியுள்ள பேருரையில் உள்ளது. இது சிவபூசை பற்றிக் கூறும் நூல். ஆகமங்கள், ‘சோமசம்பு சிவாசாரியர்’, ‘ஞான சிவாசாரியர்’ பற்றிய செய்திகள் இதில் தரப்பட்டுள்ளன. உரையில் காட்டப்பட்டுள்ள இந்த நூலின் மேற்கோள் பாடல்கள் சிவஞான சித்தியார் பாடல்களின் கருத்தையும், நடையையும் அடியொற்றிச் செல்கின்றன.
பாடல் (எடுத்துக்காட்டு) [1]
செய்யும் வகை இரண்டு படி ஆகும், தேரில்
திகழ் ஞானவதி கிரியாவதி என்று செப்பி
உய்யும் வகை உவந்து மனோ பாவகத்தால் மலங்கள்
ஓட்டுவது ஞானவதி, ஒண் கிரியாவதி தான்
வையம் திகழ் குண்டம் மண்டலம் இட்டு மற்றும்
மருவு திரு மேற்கட்டி கட்டி வளர் தருப்பை
கொய்யும் மலரால் செய்த மாலைகளும் தூக்கிக்
கும்ப கலசங்களும் கொண்டு இயற்றுவன குறித்தே.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑ பொருள் விளங்கும் வகையில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது.