சிவ் கேரா

இந்திய அரசியல்வாதி

சிவ் கேரா (Shiv Khera) என்பவர் இந்தியாவில் பிகாரில் பிறந்த நூலாசிரியர், வணிக ஆலோசகர், மற்றும் 'தன்முன்னேற்றம்' குறித்து ஊக்குவிக்கும் சொற்பொழிவாளர் ஆவார். பதினான்கு நூல்கள் எழுதியுள்ளார்.

சிவ் கேரா

வாழ்க்கைக் குறிப்பு தொகு

ஒவ்வொருவர் அகத்திலும் உறைந்து கிடக்கும் ஆற்றலைக் கண்டுணர்ந்து அதனை வளர்த்தெடுக்கவேண்டும் என்றும், அதற்கான உத்திகளை விரிவாக எடுத்துக் காட்டியும் உலக அளவில் பயிற்சி அளித்து வருகிறார்.

1998 இல் சிவ் கேரா 'நீங்கள் வெல்ல முடியும்' என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். அந்நூல் பல இலக்கம் படிகள் விற்பனையானது. பிற மொழிகளிலும் அந்த நூல் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது.

லிவிங் வித் ஆனர், பிரீடம் ஈஸ் நாட் பிரீ என்ற நூல்களையும் சிவ் கேரா எழுதினார்.

உலக நாடுகளுக்குப் பயணம் செய்து பெரும் வணிக நிறுவன அதிகாரிகளுக்கும் தொழில் முனைவோருக்கும் தன் முன்னேற்றம் பற்றிய பயிற்சிப் பட்டறைகள் நடத்தினார்.[1]

லுப்தான்சா, ஜான்சன் அண்டு ஜான்சன், பென்ஸ், நெஸ்லே, சிட்டி குரூப் போன்ற பெரும் குழுமங்கள் சிவ் கேராவின் வாடிக்கையாளர்கள் ஆவர்.

அரசியல் நுழைவு தொகு

இந்தியாவில் சாதி வாரி ஒதுக்கீடு கூடாது என்னும் கொள்கை அடிப்படையில் பாரதிய ராசுட்ரவாடி கட்சி ஒன்றைத் தொடங்கினார்.html[2]

2004 இல் தெற்குத் தில்லி தொகுதியிலிருந்து தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார். அது போல 2009 பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டுத் தோற்றார்.

பொதுநல வழக்குகளை உச்சநீதி மன்றத்தில் தொடுத்தார்.

பெற்ற சிறப்புகள் தொகு

ரவுண்ட் டேபிள் பவுண்டசன் என்ற அமைப்பின் விளம்பரத் தூதராக இருந்தார்.

ரோட்டரி இன்டர்நேசனல், லையன்சு இண்டர்நேசனல் போன்ற அமைப்புகள் சிவ் கேராவைக் கவுரதவித்தன.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ்_கேரா&oldid=2711140" இலிருந்து மீள்விக்கப்பட்டது