சிவ் நரேன் குரீல்

இந்திய மருத்துவர்

சிவ் நரேன் குரீல் (Shiv Narain Kureel) இந்தியாவைச் சேர்ந்த ஒரு குழந்தை அறுவை சிகிச்சை நிபுணராவார். மருத்துவத்துறை கல்வியாளராகவும் எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். இலக்னோ நகரத்திலுள்ள கிங் சியார்ச்சு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் குழந்தை அறுவை சிகிச்சை துறையின் பேராசிரியரும் தலைவருமாகப் பணியாற்றினார்.

சிவ் நரேன் குரீல்
Shiv Narain Kureel
பிறப்பு2 நவம்பர் 1956 (1956-11-02) (அகவை 67)
உத்தரப்பிரதேசம், இந்தியா
பணிகுழந்தைகள் மருத்துவர்
மருத்துவத்துறை கல்வியாளர்
அறியப்படுவதுகுழந்தைகள் அறுவைச் சிகிச்சை நிபுணர்
விருதுகள்பத்மசிறீ

ஆரம்பகால வாழ்க்கை. தொகு

குரீல் 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று உத்தரப்பிரதேசத்தில் பிறந்தார்.[1]

குழவி மற்றும் குழந்தை சிறுநீரக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகளுக்கு மிகவும் பிரபலமானவராக இருந்தார். [2][3]

சாதனைகள் தொகு

  • சிறுநீர்ப்பை குறித்து ஓர் ஆராய்ச்சியை இவர் நடத்தினார்,"தி அமெரிக்கன் சிறுநீரகவியல் கோல்டு என்ற செய்தி இதழின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டது. மருத்துவ உலகில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாக இது இருந்தது.
  • இந்தியாவில் பிறவிப் பிரச்சினைகளுக்கான ஒற்றை நிலை அறுவை சிகிச்சை நுட்பத்தை செய்தவர்களின் முன்னோடியாக இவர் இருந்தார்.[4]
  • இந்தியாவில் 11 வயது சிறுமிக்கு செய்யப்பட்ட முதல் குழந்தை பிறப்புறுப்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையின் செயல்திறன் மற்றும் இரண்டு வயது குழந்தைக்கு சிறுநீர்ப்பையை சரிசெய்வதற்கு ஓர் அறுவை சிகிச்சை செய்தவர் என்ற பெருமை இவருக்குரியதாகும்.[5][6]
  • இந்திய குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும் தலைவராகவும் உள்ளார். மேலும் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழான குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர்கள் செய்தி இதழின் மதிப்பாய்வாளராகவும் உள்ளார்.[7]
  • பல மருத்துவ ஆவணங்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். [8][9]

விருதுகள் தொகு

மருத்துவத் துறையில் இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2016 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[10]

மேற்கோள்கள் தொகு

  1. "Life Member IAPS". Indian Association of Pediatric Surgeons. 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.
  2. "Doctors, artists dominate Padma list from UP, Modi's constituency bags six". Times of India. 25 January 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.
  3. "Pediatric Surgery". King George's Medical University. 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.
  4. "Singer, archer, surgeon and more: Meet India's Padma awardees". Hindustan Times. 25 January 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.
  5. "Oral Mucosa Skin used for vaginal reconstruction in a rare surgery at KGMU". Medical Dialogues. 16 July 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.
  6. "Sportsperson inspires KGMU doctor to perform a rare surgery". Patrika. 30 April 2014. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.
  7. "Journal of Indian Association of Pediatric Surgeons". Indian Association of Pediatric Surgeons. 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.
  8. Sharma, Anshuman; Pandey, Anand; Rawat, Jiledar; Ahmed, Intezar; Wakhlu, Ashish; Kureel, Shiv Narain (2011). "Conventional and unconventional surgical modalities for choledochal cyst". Annals of Pediatric Surgery 7: 17–19. doi:10.1097/01.XPS.0000393093.1853.99. 
  9. Piyush Kumar, Shiv Narain Kureel (March 2016). "Isolated subglossopalatal membrane: a rare entity to encounter". BMJ 2016: bcr2016214642. doi:10.1136/bcr-2016-214642. பப்மெட்:26989115. 
  10. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 3 August 2017. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ்_நரேன்_குரீல்&oldid=3922424" இலிருந்து மீள்விக்கப்பட்டது