சிஷ்ய பாவ மூர்த்தி
சீடனாய் நின்றான் கோலம் என்பது, சிவனது அறுபத்து நான்கு திருக்கோலங்களில் ஒன்றாகும். இத்திருக்கோலம், சிவன் தன்னுடைய மகனான முருகனிடம் பிரணவத்தின் பொருள் அறிய சீடனாக நின்ற திருக்கோலம் ஆகும்.[1] தோற்றம்தொகுமுருகன் உயர்ந்த இடத்தில் அமர்ந்திருக்க, சிவன் மாணவரைப் போல பணிவுடன் நின்று பிரணவத்தின் பொருளைக் கேட்பதாக இத்திருவுருவம் அமைந்திருக்கும். ஈசனின் வலக்கரம் வாய்பொத்தியிருக்க, இடக்கரம் குறுக்காகக் கட்டப்பட்டிருக்கும். மேலமர்ந்த முருகன், வலக்கரத்தில் சின்முத்திரையும், இடக்கையில் வேலும் கொண்டிருப்பான். சில வேறுமங்களில், முருகன் சிவனின் மடியில் அமர்ந்தவாறு காட்சியருள்வான்.[2] வரலாறுதொகுகயிலையில் சிவனைத் தரிசிக்க வந்த பிரமனைக் கண்ட முருகன், அவரிடம் பிரவண மந்திரத்தின் பொருளைக் கேட்டார். பிரவணத்தின் பொருள் தெரியாமல் பிரம்மன் தடுமாற, அவர் தலையில் குட்டிச் சிறையிலடைத்த முருகன், படைப்புத் தொழிலை தானே மேற்கொள்ளலானார். பிரம்மனின் சிறைவாசத்தினை தடுத்திட திருமாலும் ஏனைய தேவர்களும் சிவனிடம் வேண்டினர். சிவன் முருகனிடத்தே சென்று "பிரம்மனை பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாததால் சிறைபடுத்தியிருக்கிறாய், உனக்கு அதன் பொருள் தெரியுமா" என வினவினார். முருகன் தனக்கு பிரணவத்தின் பொருள் தெரியும் என்றும், அறிந்ததை எடுத்துக் கூறுபவர் குருவாகவும், அதனைக் கேட்பவர் சீடராகவும் இருக்க வேண்டும் என்றார். அதனால் முருகன் மேலிடத்து அமர்ந்திருக்க சிவன் சீடனைப் போல பணிவுடன் அமர்ந்து, பிரணவத்தின் பொருளைக் கேட்டறிந்தார்[3] திருத்தலம்தொகுசுவாமிமலையை, முருகன் ஈசனுக்கு பிரணவப் பொருளுரைத்த தலமாகக் கொள்வது தமிழ் மரபு. அடிக்குறிப்புகள்தொகு
|