விழுத்தொடர் பாணித் தாள்கள்
(சி.எஸ்.எஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விழுத்தொடர் பாணித் தாள்கள் (c.s.s) (Cascading Style Sheets (CSS)) என்பது ஒரு ஆவணத்தின் உள்ளடக்கத்தை எப்படி வலைப்பக்கத்தில் தோற்றுவிப்பது என்பதை வரையறை செய்யும் குறியீட்டு மொழி ஆகும். ஒரே உள்ளடக்கத்துக்கு வெவ்வேறு தோற்றத்தை இலகுவாகத் தெரிவு செய்ய இது ஏதுவாகிறது.
கோப்பு நீட்சி | .css |
---|---|
அஞ்சல் நீட்சி | text/css |
உருவாக்குனர் | World Wide Web Consortium |
தோற்றம் | 17 டிசம்பர் 1996 |
இயல்பு | Style sheet language |
சீர்தரம் | Level 1 (Recommendation) Level 2 (Recommendation) Level 2 Revision 1 (Recommendation) |
தொடக்கத்தில் ஒரு வலைப்பக்கத்தின் தோற்றமும் அதன் உள்ளடக்கமும் (உரை) ஒரே குறியீட்டு முறையினால் குறிக்கப்பட்டது. இது ஆக்க, பராமரிக்க, சீரான தோற்றத்தைத் தரச் சிரமாக இருந்தது. அதன் பின்னரே உள்ளடக்கமும் அதன் தோற்றப்பாடும் பிரிக்கப்பட்டது.