சி. எஸ். ராமாச்சாரி

சி. எஸ். இராமாச்சாரி என்பவர் ஒரு தொழிலதிபர் சௌராட்டிர சமுகத்தைச் சேர்ந்த இவர் முதலில் மதுரை திருநகரில் சீதாலட்சுமி நூற்பாலை எனும் பெயரில் ஒரு நூற்பாலையைத் தொடங்கி நடத்தி வந்தார். அதன் பின்னர் தேனி, மானாமதுரை, நாங்குநேரி, இராமநாதபுரம் போன்ற ஊர்களில் நலிவடைந்த நிலையிலிருந்த சில நூற்பாலைகளைப் பெற்று அதைத் தன் நிருவாகத் திறமையின் மூலம் சிறப்பாகக் கொண்டு வந்தவர்.

ஆற்றிய சமுகப் பணிகள்

தொகு

இவர் ‘சீதாஇலக்குமி அறக்கட்டளை’ எனும் பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி, மதுரை, திருநகரில் சீதாஇலக்குமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்கி வைத்தார். மருத்துவமனை போன்றவைகளைத் தொடங்கி நடத்திடச் செய்தார். மதுரையிலிருக்கும் சௌராட்டிர மேல்நிலைப்பள்ளி யில்” கூட்ட அரங்கம்” ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். மதுரை சௌராட்டிர கல்லூரியை நிறுவத் தேவையான பணம் அளித்ததுடன், கல்லூரிக்கான பல புதிய கட்டிடங்களையும் கட்டிக் கொடுத்தார். தஞ்சாவூர், மானம்புச்சாவடியில் உள்ள சௌராட்டிர தொடக்கப் பள்ளிக்கு கட்டிட நன்கொடை வழங்கினார்.

உசாத்துணை நூல்

தொகு
  • சௌராட்டிரர் வரலாறு, ஆசிரியர், குட்டின். சேதுராமன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._எஸ்._ராமாச்சாரி&oldid=3497450" இலிருந்து மீள்விக்கப்பட்டது