சி. ஐஸ்வர்யா

சி. ஐஸ்வர்யா, இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் வசித்து வரும் கர்நாடக இசைக்கலைஞரும், வீணை கலைஞரும், குரலிசைக் கலைஞருமாவார். கர்நாடக இசைக் கலைஞர்கள் குடும்ப பாரம்பரியத்தை உடைய இவர், புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞரான ம. ச. சுப்புலட்சுமியின் [1][2] கொள்ளுப்பேத்தியும், ராதா விஸ்வநாதனின் பேத்தியுமாவார். [3]

சி. ஐஸ்வர்யா
இயற்பெயர்சி. ஐஸ்வர்யா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)கர்நாடக பாரம்பரிய பாடகி
இசைத்துறையில்2007ஆம் ஆண்டு முதல்

இசைப்பயணம்

தொகு

ஐஸ்வர்யா தனது நான்கு வயதிலிருந்தே, கருநாடக இசைப்பாடங்களை எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் ராதா விஸ்வநாதன் ஆகியோரின் கீழ் பயிற்சி பெறத்தொடங்கியுள்ளார். 2018 ஆம் ஆண்டில் இறந்த தனது பாட்டியான, ராதா விஸ்வநாதனின் கீழ் 18 ஆண்டுகள் தொடர்ந்து கர்நாடக இசையைக் கற்று தேறியுள்ளார் [4]

அக்டோபர் 2017 ஆம் ஆண்டில், ஐஸ்வர்யா மற்றும் அவரது சகோதரி சவுந்தர்யாவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் பாட அழைத்தது குறிப்பிடத்தக்கது. [2] உலக அமைதிக்காக இயற்றப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையில் 1966 ஆம் ஆண்டில் எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் ராதா விஸ்வநாதன் ஆகியோரால் பாடப்பட்ட  "மைத்ரீம் பஜதா" என்ற பாடலை அந்நிகழ்ச்சியில் பாடியுள்ளனர் .

ஐஸ்வர்யாவும் அவரது சகோதரி சவுந்தர்யாவும் இணைந்து இந்தியா முழுவதிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர், மேலும் உலகெங்கிலும் உள்ள பல புகழ்பெற்ற அரங்குகளில் கருநாடக பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளனர்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

தொகு

தனது இசைத்திறமைக்காக ஐஸ்வர்யா பல்வேறு விருதுகளையும், கவுரவங்களையும் பெற்றுள்ளார்.[5]

ஆண்டு மரியாதை வழங்கிய அல்லது வழங்கிய மரியாதை
2017 யுவ கலா பாரதி பாரத் கலாச்சார், சென்னை
2017 எஸ்.வி.என்.ராவ் விருது இளைஞர்களின் சிறப்பிற்கு ஸ்ரீ ராம சேவா மண்டலி, பெங்களூர்
2017 தொழில்சார் சிறப்பு விருது ரோட்டரி கிளப், சென்னை
2017 இளம் பெண் சாதனையாளர் விருது ஏஎம்என் குளோபல் குரூப், சென்னை
2016 கிளாசிக்கல் ஆர்ட்ஸ் தூதர் கனெக்டிகட் பொதுச் சபை, அமெரிக்கா
2016 சிறந்த இளம் கர்நாடக பாடகர் மற்றும் இந்திய பாரம்பரிய இசையின் ரைசிங் ஸ்டார் ஏஎம்என் குளோபல் குரூப், சென்னை
2016 இளம் சாதனையாளர் விருது A3 அறக்கட்டளை, சண்டிகர்
2016 எம்.எஸ்.சுப்புலட்சுமி சங்கீத புரஸ்கார் எம்.எஸ்.சுப்புலட்சுமி அறக்கட்டளை, வர்கலா, கேரளா
2016 எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு விருது டிரினிட்டி ஃபைன் ஆர்ட்ஸ், சென்னை
2016 சங்கீத பரம்பரா புரஸ்கார் கலாலயா, சான் ஜோஸ்
2016 காவேரி கன்னட விருது கன்னட கூட்டா, வாஷிங்டன் டி.சி
2015 இந்த ஆண்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய கலைஞர் - டாக்டர் சித்ரா நாராயணசுவாமி விருது பிரம்ம ஞான சபை
2015 டி.கே.கோவிந்த ராவ் விருது ஸ்ரீ கிருஷ்ண ஞான சபை
2011 மதுரை மணி ஐயர் விருது ஸ்ரீ கிருஷ்ண ஞான சபை

மேற்கோள்கள்

தொகு
  1. "MS Subbulakshmi's great-granddaughters meet PM Modi". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2023-02-20.
  2. 2.0 2.1 "Around Town: From classical concerts to book releases and textile exhibitions, what's keeping the cultural calendar buzzy and busy this week". The Indian Express (in ஆங்கிலம்). 2021-04-10. பார்க்கப்பட்ட நாள் 2023-02-20.
  3. "Recreating the legend of M.S. Subbulakshmi" (in en-IN). 2016-03-11. https://www.thehindu.com/entertainment/recreating-the-legend-of-ms-subbulakshmi/article8341591.ece. 
  4. "Radha Vishwanathan, daughter of M.S. Subbulakshmi, dies at 83" (in en-IN). 2018-01-03. https://www.thehindu.com/entertainment/music/radha-vishwanathan-daughter-of-ms-subbulakshmi-dead-at-83/article22357741.ece. 
  5. "Awards and Recognitions". S.Aishwarya (in ஆங்கிலம்). 2016-11-11. பார்க்கப்பட்ட நாள் 2023-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஐஸ்வர்யா&oldid=3699956" இலிருந்து மீள்விக்கப்பட்டது