சி. கனகசபாபதி
தமிழ் திறனாய்வாளர்
சி. கனகசபாபதி என்பவர் ஒரு கல்வியாளர், திறனாய்வாளர். தமிழ்ப் பேராசிரியர் ஆவார். ஒரு பேராசிரியராக முதன்முதலாகப் புதுக்கவிதையை வரவேற்று எழுதியவர் ஆவார். இவர் பொதுநிலைச் சமூகவியலார்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.[1]
இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நவீனத் தமிழ் இலக்கியம் கறிபித்துவந்தார்.[2] மேலும் இவர் முதன்மையாக எழுத்து இதழில் தொடர்ந்து எழுதினார். புதுக்கவிதையின் உருவ அமைப்பு, உருவகம், படிமம் முதலியவை உள்ளிட்ட அதன் உத்திகள், பொதுவான கட்டமைப்பு முதலியவற்றை விரிவாக விளக்கி திறனாய்வு செய்துள்ளார்.[3]
எழுதிய நூல்கள்
தொகு- பாரதி-பாரதிதாசன் கவிதை மதிப்பீடு [1979]
- தி-பாரதிதாசன் ஒப்பியல் திறனாய்வு [1980]
- பாரதியும் பிறகும் ந. பிச்சைமூர்த்தியும் பிறகும்
- புனைகதைகள், சி. கனகசபாபதி கட்டுரைகள் (2005)[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ் இலக்கிய வரலாறு, மு. அருணாசலம்
- ↑ சி.சு.செல்லப்பா: லட்சிய தாகம், சி.மோகன், இந்து தமிழ், 2019 மார்ச் 24
- ↑ தமிழ் இணையக் கல்விக்கழகம், சி. கனகசபாபதி
- ↑ National Library Board