சி. கே. என். பட்டேல்

சி. குமார் என். பட்டேல் (பி. 2 சூலை, 1938) 1963- ஆம் ஆண்டு கார்பன் டையாக்சைடு லேசரை வடிவமைத்தார்.[1] இந்த லேசர் வெட்டலுக்கும் பற்றவைத்தலுக்கும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. C O 2 லேசர் மட்டுமல்லாது அகச்சிவப்பு இராமன் லேசரையும் பட்டேல் தயாரித்துள்ளார்.

C. Kumar N. Patel
பிறப்புசூலை 2, 1938 (1938-07-02) (அகவை 85)
பராமத்தி, பூனா மாவட்டம், மகாராட்டிரம்.
வாழிடம்ஒன்றிணைந்த அமெரிக்கக் குடியரசுகள்
தேசியம்அமெரிக்கர்
துறைமின் பொறியியல்
பணியிடங்கள்பெல் ஆய்வகம்
கல்வி கற்ற இடங்கள்பூனா பொறியியல் கல்லூரி, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்.
விருதுகள்IEEE Medal of Honor

சி. கே. என். பட்டேல் மகாராட்டிர மாநிலம் பூனா மாவட்டத்திலுள்ள பராமத்தி என்னும் ஊரில் பிறந்தவர்; பூனா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். 1961- ஆம் ஆண்டு பெல் ஆய்வத்தில் சேர்ந்த பட்டேல் அங்கிருந்தவாறே கார்பன் டையாக்சைடு லேசரைத் தயாரித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Patel, C. K. N. (1964). "Continuous-Wave Laser Action on Vibrational-Rotational Transitions of CO2". Physical Review 136 (5A): A1187–A1193. doi:10.1103/PhysRev.136.A1187 [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கே._என்._பட்டேல்&oldid=2707787" இலிருந்து மீள்விக்கப்பட்டது