சி. சி. எல். கிரிகொரி
பிரித்தானிய் வானியலாளர்
கிறித்தோபர் கிளைவ் இலாங்டன் கிரிகொரி (Christopher Clive Langton Gregory) (13 மே 1892 – 24 நவம்பர் 1964) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் இலண்டன் பல்கலைக்கழக வான்காணகத்தை நிறுவினார்.[1]
சி. சி. எல். கிரிகொரி | |
---|---|
பிறப்பு | கிறித்தோபர் கிளைவ் இலாங்டன் கிரிகொரி 13 மே 1892 பார்க்சுட்டோன், தோர்செட், இங்கிலாந்து |
இறப்பு | 24 நவம்பர் 1964 குரூக்காம், காம்ப்சயர், இங்கிலாந்து | (அகவை 72)
தேசியம் | பிரித்தானியர் |
பணி | வானியலாளர் |
வாழ்க்கைத் துணை | எலன் பட்ரீசியா(முதல் மனைவி) அனிதா கோகுசன், (1954 இல் திருமணம் செய்த இரண்டாம் மனைவி) |
பிள்ளைகள் | இரிச்சர்டு கிரிகொரி |
இவர் இங்கிலாந்து, தோர்செட்டில் உள்ள பார்க்சுட்டோனில் பிறந்து. அதே தோர்செட்டில் உள்ள சுவனாகியில் 1911 இலும் மிடில்செக்சில் உள்ள கெண்டனில் 1939 இலும் வாழ்ந்துள்ளார். இவர் இங்கிலாந்து காம்ப்சயரில் உள்ள குரூக்காம் எனும் ஊரில் இறந்துள்ளார். [2]
இவரது முதல் மனைவியாகிய கிப்சன் எனும் எலன் பாட்ரீசியாவுக்குப் பிறந்த மகன் இரிச்சர்டு கிரிகொரி(1923–2010) ஓர் உளவியலாளர். இவரது இரண்டாம் மனைவி கோகுசன் எனும் அனிதா கிரிகொரி ஆவார்.
இவர் 1939 இல் எடுத்த ஒளிப்படம் இலண்டன் தேசிய ஓவியக் காட்சியரங்கில் உள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Christopher Clive Langton Gregory (obituary)". Quarterly Journal of the Royal Astronomical Society 7: 81. 1966. Bibcode: 1966QJRAS...7...81..
- ↑ https://ancestors.familysearch.org/en/LCDC-51N/christopher-clive-langton-gregory-1892-1964
- ↑ "Christopher Clive Langton Gregory - National Portrait Gallery". பார்க்கப்பட்ட நாள் 26 September 2018.
வெளி இணைப்புகள்
தொகு- Obituary at Quarterly Journal of the Royal Astronomical Society, Vol. 7, p. 81, by E. Margaret Burbidge