சி. து. தேஷ்முக்
இந்திய அரசியல்வாதி
சர் சிந்தாமன் துவாரகநாத் தேஷ்முக் என்பவர் ஓர் இந்திய அரசுப் பணியாளர் ஆவார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் இவரே. இவர் 1950-1956 ஆண்டுகளில் இந்திய அரசின் நிதியமைச்சராகப் பணியாற்றினார். பின்னர், பல்கலைக்கழக மானியக் குழுமத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 1962-1967 ஆம் ஆண்டுகளில் தில்லிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.
இளமைக் காலம்
தொகுசிந்தாமன் தேஷ்முக 1896 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர் துவாராகநாத் கணேஷ் தேஷ்முக், பகிரதபாய் ஆவர். இளமைக் காலக் கல்வியை மும்பையில் கற்றுத் தேறினார். சமற்கிருதத்தில் கல்வியாளர் பட்டம் பெற்றார். அந்த காலங்களில், இலண்டனில் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இந்திய அரசுத் தேர்வில் தோன்றி தேர்ச்சி பெற்றார்.