சி/1847 தி1
சி/1847 தி1 (C/1847 T1) என்பது காலமுறையற்ற ஒரு வால்வெள்ளி ஆகும். 1847 ஆம் ஆண்டு அமெரிக்க வானியலாளர் மரியா மிட்செல் இவ்வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தார். தற்பொழுது இவ்வால் வெள்ளியை செல்வி மிட்செல் வால்வெள்ளி என்று அழைக்கிறார்கள்.[1]
கண்டுபிடிப்பு | |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்): | மரியா மிட்செல்l |
கண்டுபிடித்த நாள்: | நவம்பர் 31, 1852 |
வேறு குறியீடுகள்: | செல்வி மிட்செல் வால்வெள்ளி |
சுற்றுவட்ட இயல்புகள் A | |
ஐரோப்பாவில், பிரான்செசுகோ டெ விக்கோ முதன் முதலில் இவ்வால் வெள்ளியைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார். சி/1847 தி1 வால்வெள்ளியை ரோமில் இருந்து உற்று நோக்கிய இவர், இவ்வால்வெள்ளி முதன்முதலில் ஐரோப்பாவில் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால் இவர் அறிவிப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பே மரியா மிட்செல் கண்டறிந்து அறிவித்துவிட்ட காரணத்தால் சி/1847 வால்வெள்ளியைக் கண்டுபிடித்த பெருமை இவருக்கு உரியதாயிற்று.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Maria Mitchell Discovers a Comet". This Month in Physics History. American Physical Society. பார்க்கப்பட்ட நாள் November 1, 2012.
- ↑ "Comet". Maria Mitchell. Maria Mitchell Association. பார்க்கப்பட்ட நாள் November 1, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]