சி3 கார்பன் நிலைநிறுத்தம்
C3 கார்பன் நிலைநிறுத்தம்(C3 carbon fixation) என்பது தாவரங்களில் காணப்படும் மூன்று வகையான கார்பன் நிலைநிறுத்தப் பாதைகளுள் ஒன்று ஆகும்.. சி4 கார்பன் நிலைநிறுத்தம், கிராசுலாசியன் அமில வளர்சிதைமாற்றம் ஆகிய இரண்டும் மற்ற இரு பாதைகள் ஆகும்.. இச்செயல் முறையில் கார்பன் டை ஆக்சைடும் ரிபுலோசு பிசுபாசுபேட்டும் (5 கார்பன் சர்க்கரை) 3-பாசுபோகிளிசரேட்டு சேர்மமாக மாற்றப்படுகின்றன.
- CO2 + H2O + RuBP → (2) 3-பாசுபோகிளீசரேட்டு
கால்வின்-பென்சன் சுழற்சியின் முதல்படி நிலையில் அனைத்துத் தாவரங்களிலும் இவ்வினை நடைபெறுகிறது. சி4 தாவரங்களில் கார்பனீராக்சைடு நேரடியாக காற்றிலிருந்து எடுத்துக் கொள்ளப்படாமல் மாலேட்டு சேர்மத்திலிருந்து எடுக்கப்படுகிறது.
C3 கார்பன் நிலைநிறுத்தப் பாதையை முதன்மைப் பாதையாய்க் கொண்ட தாவரங்கள் C3 தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை C4 தாவரங்களை விட பரிணாமத்தில் மூத்தவை. C3 தாவரங்களுக்கு அதிக அளவில் நீர் தேவை. இவற்றால் கடும் தட்பவெப்ப நிலைகளில் வாழ இயலாது. இத்தாவரங்கள் வேர்களால் உறிஞ்சும் நீரில் 97 விழுக்காடு நீராவிப்போக்கால் வெளியேறுகிறது.[1] புவியின் 95 விழுக்காட்டுத் தாவர உயிரிநிறை C3 தாவரங்களால் ஆனது. அரிசி, பார்லி ஆகியவை குறிப்பிடத்தக்க C3 தாவரங்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Raven, J. A.; Edwards, D. (2001). "Roots: evolutionary origins and biogeochemical significance". Journal of Experimental Botany 52 (90001): 381–401. doi:10.1093/jexbot/52.suppl_1.381. பப்மெட்:11326045.