நியமப் புள்ளி

(சி - வெட்டுப் புள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்க 2001ம் ஆண்டு முதல் நியமப் புள்ளி (Standard Score அல்லது Z-Score) முறையே அமுல்படுத்தப்படுகின்றது. 2000ம் ஆண்டுக்கு முன்னர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மாணவர்களுடைய உயர்தரப் பரீட்சையில் மொத்தப்புள்ளிகளை அடிப்படையாக வைத்து அவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதித்தது. இம்முறையில் எந்தவொரு பாடப்புள்ளியும் மற்றைய பாடப்புள்ளிகளுடன் ஒப்பிடப்படுவதில்லை.

ஆனால், இன்று மாணவர்கள் வெவ்வேறு பாடங்களில் பெறும் புள்ளிகள் ஒப்பிடப்பட்டே நியமப் புள்ளி பெறப்படுகிறது. ஒரு மாணவன் ஒவ்வொரு பாடத்திற்கும் சம புள்ளி பெற்றாலும்கூட ஒவ்வொரு பாடத்திலும் பெறப்படும் புள்ளிகள் சமனாகாது. ஏனெனில், ஒவ்வொரு வினாத்தாளினதும் தராதரம் ஒன்றிலிருந்து ஒன்று முரண்பட்டது. இவ்வேறுபாடுகளை நீக்கி வேறு வினாத்தாள்களின் மொத்தப்புள்ளிகளைச் சமன் செய்வதற்காகவே பல்கலைக்கழக ஆணைக் குழுவினால் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தெரிவு முறை பல நாடுகளில் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கணிப்பு முறை

தொகு

இசட் - பெறுமதி என்பது ஓரலகு நியம விலகலுக்கு குறித்தவொரு புள்ளிக்கும் பரம்பலின் இடைப் பெறுமானத்திற்கும் இடையிலான வெறுபாடாகும்.

 

இங்கு

x - மாணவன் பெற்ற புள்ளி;
μ - குறித்த பாடத்தில் புள்ளிகளின் இடைப் பெறுமானம்;
σ - பாடத்திற்கான நியம விலகல்.

ஒரு மாணவன் பெற்ற வெவ்வேறு பாடத்தின் மொத்தப் புள்ளியை நியமப்படுத்தி ஒரு நிலைப்படுத்துவதற்காக சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறை Z – புள்ளி ஆகும். இது ஒரு அடிப்படை நியமப் புள்ளி ஆகும்.

இலங்கையில் Z – புள்ளி (Z SCORE) புள்ளிமுறை பல்கலைக்கழக அனுமதிக்காக வெட்டுப்புள்ளி பயன்பட்டாலும்கூட, Z– புள்ளி (Z SCORE) என்பது புள்ளிவிபரவியல் சம்பந்தப்பட்ட ஒரு கணிப்பீட்டு முறையாகும். பல விடயங்களில் இதன் பயன்பாடு பெறப்பட்டு வருகின்றது.

இலங்கையில் பல்கலைக்கழக அனுமதிக்கு இம்முறை பொருத்தமற்றது என ஒரு சாராரும், பொருத்தமானது என ஒரு சாராரும் இன்றுவரை பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியமப்_புள்ளி&oldid=1358256" இலிருந்து மீள்விக்கப்பட்டது