சீக்கதேலிக்கு ராக்
சீக்கதேலிக்கு ராக் (Psychedelic rock) என்பது ஒரு ஒரு மேற்கத்திய இசை வகை ஆகும். இது 1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிலும் ஐக்கிய இராசியத்திலும் தோற்றுவிக்கப்பட்டது. இவ்விசைவகை ராக் இசை மற்றும் சீக்கதேலிக்கு இசை ஆகிய இரு இசை வகைகளின் சங்கமம் ஆகும். கிராமிய ராக் இசைக்குழுவினர்களாலும் புளூசு ராக் இசைக்குழுவினர்களாலும் தோற்றுவிக்கப்பட்டது. மன உணர்வுகளை மாற்றுகின்ற போதைப்பொருள்களைப் போல எழுச்சியூட்டும் இசையாக இது உருவானது. மேலை நாட்டு இசையோடு கீழை நாட்டு இசையை, குறிப்பாக இந்திய இராக முறையை இணைக்கும் முயற்சியாகவும் அமைந்தது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |