சீசெல்சில் திமிங்கில வேட்டை

சீசெல்சில் திமிங்கில வேட்டை (Whaling in Seychelles ) எண்ணெய்த் திமிங்கிலதிற்காக 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்றது. எண்ணெய்த் திமிங்கிலத்தின் விலை வீழ்ச்சி காரணமாக 1915 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட திமிங்கில வேட்டை முடிவுக்கு வந்தது.[1] முதலாம் உலகப் போரின் தொடக்கமும்[2] வேட்டைப் பொருள்களின் பற்றாக்குறையும் இதற்கான கூடுதல் காரணங்களாக அமைந்தன. எண்ணெய்த் திமிங்கிலங்கள் பொதுவாக பறவை மற்றும் தெனிசு தீவுகளுக்கு அருகில் பிடிக்கப்பட்டு புனித அன்னேவில் உள்ள திமிங்கல நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டன.[3]

சீசெல்சில் திமிங்கில வேட்டை; 1903

இந்தியப் பெருங்கடல் திமிங்கில சரணாலயத்தை உருவாக்குவதில் ஒரு ஆச்சரியமான நடவடிக்கையை எடுத்து 1979 ஆம் ஆண்டு எழுத்தாளர் இலையால் வாட்சன் பன்னாட்டு திமிங்கல ஆணையத்தில் சீசெல்சு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அரசியல் அழுத்தம் மற்றும் நாட்டிற்கு உதவிப் பொதி சலுகைகள் கிடைப்பது போன்ற நன்மைகள் இருப்பினும் சீசெல்சு நாட்டின் கடல் பகுதியில் திமிங்கலத்தை வேட்டையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு சப்பான் அதிருப்தி அடைந்தது. சீசெல்சு தன்து நாட்டின் கடல் பகுதியில் திமிங்கில வேட்டையாடுவதை எதிர்பதில் உறுதியாக உள்ளது.[4]

மேற்கோள்கள்

தொகு