சீதாதபத்திரை

சீதாதபத்திரை வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு பெண் போதிசத்துவர் ஆவார். மேலும் இவர் 'வெண்குடையின் தேவி' என போற்றப்படுகிறார். அசாதாராண ஆபத்துகளில் இருந்து காப்பாற்றக்கூடியவராக இவர் கருதப்படுகிறார்.

சீதாதபத்திரை

சீதாதபத்திரை புரிந்து கொள்வதற்கு மிகவும் சிக்கலான பெண் போதிசத்துவர் ஆவார். இவர் அவலோகிதேஷ்வரரின் பெண் இணையாக கருதப்படுகிறார். அவலோகிதேஷ்வரரைப் போலவே இவரும் ஆயிரம் தலைகள், ஆயிரம் கை-கால் கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். இல்லையெனில் எளிய வடிவில் ஒரு அழகான பெண்ணாக காட்சியளிக்கிறார். இவர் வெண்குடையுடன் தொடர்பு படுத்தப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதாதபத்திரை&oldid=2960711" இலிருந்து மீள்விக்கப்பட்டது