சீதாமர்கி குகை
சீதாமர்கி குகை (Sitamarhi Cave) இந்தியாவிலுள்ள ஒரு செயற்கை குகையாகும். பாறையில் வெட்டப்பட்ட கட்டிடக்கலைக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். இராச்கிரில் இருந்து தென்மேற்கே 20 கிமீ தொலைவிலும் இசுவாவிலிருந்து 10 கிமீ தென்மேற்கிலும் இக்குகை அமைந்துள்ளது. மௌரியப் பேரரசு காலத்தில் இருந்து இக்குகை இருக்கிறது.[1] கிரானைட் கற்களால் ஆன ஒரு பெரிய அரைக்கோளப் பாறையில் வெட்டப்பட்டுள்ளது.
இந்த குகையில் பாராபர் குகைகளின் அமைப்பு மற்றும் மௌரிய மெருகூட்டல் குணங்கள் உள்ளன. ஆனால் இங்கு எந்த கல்வெட்டுகளும் இல்லை. பாராபர் குகைகளை விட சிறியதாக உள்ளது, 4.91x3.43மீ பரப்பளவு மட்டுமே அளவிடப்படுகிறது. உச்சவரம்பு உயரம் 2.01மீட்டர். நுழைவாயிலும் பாராபர் குகைகளைப் போலவே சரிவகமாக உள்ளது .[1]
பிற்கால இந்து புராணத்தின் படி, இந்த குகை புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் விசுவகர்மனால் கட்டப்பட்டது. சீதை மாராவிடமிருந்து அடைக்கலம் பெற்ற குகையும் இதுதான். எனவே தான் குகைக்கு இது பெயரானது.
இந்த குகை சில நேரங்களில் சோன் பண்டார் குகைகளுடன் சேர்ந்து "இராச்கிர் குழுவின்" ஒரு பகுதியாக கருதப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Gupta, The roots of Indian Art, p.194-
- ↑ Le, Huu Phuoc (2010). Buddhist Architecture (in ஆங்கிலம்). Grafikol. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780984404308.