சீதாராம் நாயக் அஸ்மீரா

இந்திய அரசியல்வாதி

சீதாராம் அஸ்மீரா, தெலுங்கானா அரசியல்வாதி. இவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1956-ஆம் ஆண்டின் ஆகஸ்டு இருபதாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், மஹபூபாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஹனம்கொண்டா எனும் ஊரைச் சேர்ந்தவர்.[1]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதாராம்_நாயக்_அஸ்மீரா&oldid=3244931" இலிருந்து மீள்விக்கப்பட்டது