சீதோசெரைட்டு

சோரோசிலிக்கேட்டு கனிமம்

சீதோசெரைட்டு (Seidozerite) என்பது Na4MnZr2Ti(Si2O7)2O2F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமமாகும். இது ஒரு சோரோசிலிக்கேட்டு வகை கனிமமாகும். தைட்டானியம் இருசிலிக்கேட்டு எனப்படும் சீதோசெரைட்டு சிறப்புக்குழுவாக இது கருதப்படுகிறது. செமனோவ், கசகோவா, சிமோனோவு ஆகியோரால் 1958 ஆம் ஆண்டில் முதன்முதலில் விவரிக்கப்பட்டது.[1] உருசியாவின் மூர்மன்சுக் மாகாணம், கோலா தீபகற்பத்தின் உலோசோசெரோ மாசிவ் மலைத்தொடரில் சீடோசெரோ ஏரியில் கண்டுபிடிக்கப்பட்டது.[2]

சீதோசெரைட்டு
Seidozerite
உருசியாவின் மூர்மன்சுக் மாகாணம், கோலா தீபகற்பத்தின் உலோசோசெரோ மாசிவ் மலைத்தொடரில் சீடோசெரோ ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட சீதோசிரைட்டு
பொதுவானாவை
வகைசோரோசிலிக்கேட்டுகள்
வேதி வாய்பாடுNa4MnZr2Ti(Si2O7)2O2F2
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மேற்கோள்கள்[1][2]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சீதோசெரைட்டு கனிமத்தை Sdz[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Mineralienatlas
  2. 2.0 2.1 Mindat
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதோசெரைட்டு&oldid=4136525" இலிருந்து மீள்விக்கப்பட்டது