சீத்தடி குஞ்சு
சீத்தடி குஞ்சு என்பது சிறுவர் விளையாட்டு.
இது இருட்டில் விளையாடப்படும். இது மற்றவரின் ஒலித்திறன் காணும் உத்தி விளையாட்டு. ஒருவர் மறைவில் சீழ்க்கை அடிப்பதைக் கேட்டு அந்த ஒலி யாருடையது எனக் கண்டுபிடிப்பது இந்த விளையாட்டு. சீழ்க்கை அடி என்பது சீத்தடி என மருவியுள்ளது. சீழ்க்கை என்பது ஆள்காட்டி விரலை மடக்கி அல்லது பெருவிரலையும் சுட்டுவிரலையும் நுனியில் இணைத்து வாயில் வைத்துக்கொண்டு எழுப்பும் 'வீள்' என்னும் வீளை ஒலி
இரண்டு அணியினர் இருப்பர். ஒரு அணி ஓரிடத்தில் ஒளிந்துகொள்ளும். அந்த அணியில் ஒருவர் மறைத்து வைக்கப்படுவார் அவர் சீழ்க்கை அடிப்பார். அந்த ஒலியைக் கேட்டு எதிர் அணியில் உள்ளவர் சீழ்க்கை அடித்தவர் இன்னார் என்று சொல்லவேண்டும். சொல்லிவிட்டால் எதிர் அணியினர் சீழ்க்கை அடிக்கலாம். சொன்னது தவறாயின் அதே அணியில் மற்றொருவர் மறைத்து வைக்கப்பட்டு சீழ்க்கை அடிப்பார். எதிர் அணியினர் அறிந்து சொல்லமுடியாமல் சீழ்க்கை அடித்தவருக்கு ஒரு பழம். இப்படி அதிக பழங்கள் சேர்த்த அணி வெற்றி.
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு ஒஇளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980