சீனத் தொழிலாளர் கண்காணிப்பகம்
சீனத் தொழிலாளர் கண்காணிப்பகம் (China Labor Watch - CLW) என்பது நியூயார்க்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஒரு அரசு சார்பற்ற அமைப்பு ஆகும். இவ்வமைப்பு 2000 ஆம் ஆண்டு அக்டோபரில் தொழிலாளர்களின் ஆதரவாளர் கி கியாங் என்பவரினால் தொடங்கப்பட்டது. சீன மக்கள் குடியரசின் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவது இதன் நோக்கம் ஆகும்.
பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவின் மக்கள் வளத்தையும் கடும் உழைப்பையும் பயன்படுத்தி உயரும் அதேசமயம் சீனத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் அரசியல்வாதிகளாலும் பன்னாட்டு நிறுவனங்களாலும் மீறப்படுவதைக் ஆராய்ந்து கண்டித்து எதிர்க்கும் அமைப்பு.
இந்த தொழிலாளர் நலச்சட்ட உரிமை மீறல்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களும் முக்கிய காரணமாக அமைவதையும் அதனால் அந்நிறுவனங்கள் தொழிலாளர் உரிமையை மதித்து நடக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி சீனா லேபர் வாட்ச் அமைப்பால் ஆர்ப்பாட்டங்கள் செய்யப்படுகின்றன.
ஆப்பிள் போன்ற உயர்தர தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக சீனாவில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பலர் வேலையின் கடுமையாலும் சிரமத்தாலும் தற்கொலை செய்து கொண்டதையும் அங்கு நிலவும் உண்மை நிலைமையையும் வெளிக்கொணர்ந்தது.[1]