சீனப் பொதுவுடமைக் கட்சியின் தேசிய பேராயம்

சீனப் பொதுவுடமைக் கட்சியின் தேசிய பேராயம் (National Congress of the Communist Party of China) என்பது சீனப் பொதுவுடமைக் கட்சியின் ஒரு முதன்மை அலகு. கருத்தியல் நோக்கில் அதிக அதிகாரம் உடைய அமைப்பு. நடைமுறையில் இந்த பேராயம் கூட முன்பு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, இங்கு முடிவுகள் உறுதி செய்யப்படும். சுமார் 2000 உறுப்பினர்கள் இதில் பங்கெடுப்பார்கள். இது ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும்.