சீன அரசியலமைப்பு

சீன அரசியலமைப்பு, பொதுவாக சீன மக்கள் குடியரசின் அரசியலமைப்பு என்று அழைக்கப்படுகிறது. இது  பெயரளவில் இந்நாட்டின் மிகப்பெரிய சட்டமாகும்.

தற்போதைய பதிப்பு டிசம்பர் 4, 1982-இல் 5-ஆவது தேசிய மக்கள் காங்கிரஸால் (1988, 1993, 1999, 2004 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளின் திருத்தங்களுடன்) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சீன அரசியலமைப்பில் ஐந்து பிரிவுகள் உள்ளன. அவைகளாவன 1. முகப்புரை, 2.பொது கொள்கைகள், 3. குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள், 4. நாட்டின்  கட்டமைப்பு (இதில் தேசத்தின்  உறுப்புகளான 1. தேசிய மக்கள் காங்கிரஸ், 2. மாநில கவுன்சில், 3. உள்ளூர் மக்கள் காங்கிரஸ் மற்றும் உள்ளூர் மக்கள் அரசாங்கங்கள், 4. மக்கள் நீதிமன்றங்கள் மற்றும் மக்களின்  மேலாளர் ஆணையம்  போன்றவை அடங்கும்) மற்றும் 5. தேசிய கொடி மற்றும் அரசின் சின்னங்கள்.

2018-இன் அரசியலமைப்பு திருத்தம்

கடைசியாக மார்ச் 11, 2018-இல் அரசியலமைப்பு திருத்தப்பட்டது. இது கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டையும் மேலாதிக்கத்தையும் மேலும் சீர்படுத்தி வலுப்படுத்தியுள்ளது. மேலும் இஃது ஜி ஜிங் பிங்கின் சித்தாந்தங்களை முகப்புரையில் சேர்த்ததோடன்றி அதிபர் மற்றும் துணை அதிபரின் கால வரம்புகளை நீக்கியும் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_அரசியலமைப்பு&oldid=3523471" இலிருந்து மீள்விக்கப்பட்டது