சீமாறு என்பது வீட்டில் உள்ள குப்பைகளைக் கூட்ட அல்லது பெருக்கப் பயன்படுத்தும் ஒரு பொருள் ஆகும். இதனை விளக்குமாறு, துடைப்பம் என்றும் கூறுவர். தமிழகத்தில் உள்ள வெவ்வேறு வட்டார மொழிகளில் வெவ்வேறு சொற்களை பயன்படுத்துகின்றனர். விளக்கமாறு என்ற சொல்லை விளக்கமாத்து எனவும், துடைப்பம் என்ற சொல்லை தொடப்பம் எனவும் பேச்சுத் தமிழில் மாற்றி மொழியப்படுகிறது.

சீமாற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான புல்லை சீமாறு புல் அல்லது சீமாற்றுப் புல் என அழைப்படுகிறது.

பவானி வட்டம், பர்கூர் மலை, கடம்பூர் மலை, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். இம்மலைப்பகுதிகளில் சோளகா, ஊராளி, மலையாளி இனத்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். மலைவாழ் மக்களின் நலன் கருதி, கடந்த, 2006ல் சிறு வனப் பொருட்களை சேகரித்து விற்பனை செய்திட, மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் இம்மக்கள் இந்த சீமாறு புல்லை பறிக்கும் தொழில் புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.[1]

இதே பொருளைக்கொண்ட வேறு பக்கங்கள் பின்வருமாறு:

மேற்கோள்கள்

தொகு
  1. "சீமாறு புல் பறிப்பதிலும் அரசியல் தலையீடுபர்கூர் பகுதி மலைவாழ் மக்கள் குமுறல்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமாறு&oldid=3386085" இலிருந்து மீள்விக்கப்பட்டது