சீயுனெரைட்டு
சீயுனெரைட்டு (Zeunerite) என்பது Cu(UO2)2(AsO4)2•(10-16)H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். ஆட்டுனைட்டு எனப்படும் நீரேறிய கால்சியம் யுரேனைல் பாசுபேட்டு குழு கனிமங்களில் ஓர் உறுப்பினராக சீயுனெரைட்டு கருதப்படுகிறது. நீர் நீக்கப்பட்ட சீயுனெரைட்டான மெட்டாசீயுனெரைட்டு இதனுடன் சேர்ந்து காணப்படுகிறது.
சீயுனெரைட்டுZeunerite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | ஆர்சனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Cu(UO2)2(AsO4)2•(10-16)H2O |
இனங்காணல் | |
நிறம் | மஞ்சள் பச்சை, மாணிக்கப் பச்சை |
படிக இயல்பு | {001} இல் தட்டையான படிகங்கள், |
படிக அமைப்பு | நாற்கோணகம் |
பிளப்பு | {001} தெளிவு, {100}, மறைமுகம் |
மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
மிளிர்வு | கண்ணாடிப் பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெளிர் பச்சை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும், நீர் நீங்கினால் ஒளி கசியும் |
ஒப்படர்த்தி | 3.2 - 3.4 |
ஒளியியல் பண்புகள் | ஒற்றை அச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nω = 1.610 - 1.613 nε = 1.582 - 1.585 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.028 |
பலதிசை வண்ணப்படிகமை | கண்களுக்குத் தெரியும் |
பிற சிறப்பியல்புகள் | கதிரியக்கம் |
மேற்கோள்கள் | [1][2][3] |
ஆர்சனிக் கலந்துள்ள நீர்வெப்ப யுரேனியத் தாது படிவுகளின் ஆக்சிசனேற்ற காலநிலை மண்டலத்தில் இரண்டாம்நிலை கனிமமாக சீயுனெரைட்டு தோன்றுகிறது. ஒலிவெனைட்டு, மேன்சுபீல்டைட்டு, சிகோரோடைட்டு, அசுரைட்டு, மாலகைட்டு போன்ற கனிமங்கள் சியூரைட்டுடன் கலந்து காணப்படுகின்றன. [1]
செருமனி நாட்டிலுள்ள சாக்சனி மாநிலம் சிக்னீபெர்கு மாவட்டத்தின் கனிம மலைத்தொடரில் 1872 ஆம் ஆண்டு சீயுனெரைட்டு கண்டறியப்பட்டது. 1828-1907 ஆம் ஆண்டு காலப்பகுதியைச் சேர்ந்த அறிவியலாளர் குசுதாவ் அண்டன் சீயுனெர் நினைவாக இக்கனிமத்திற்கு சீயுனெரைட்டு எனப்பெயரிடப்பட்டது. [2]