சீயோன்
சீயோன் (Zion, எபிரேயம்: ציון) உச்சரிப்பு: சையோன்) என்பது எருசலேம் எனும் இடத்தைக் குறிப்பது ஆகும்.[1][2] தற்கால அறிஞர்களின்படி, இச்சொல் முதலில் ஏறக்குறைய கி.மு. 630–540 காலப்பகுதிக்குரிய 2 சாமுவேல் நூல் 5:7 இல் காணப்பட்டது. இது யெரூசலேமுக்கு அருகிலுள்ள குறிப்பிட்ட மலையாகிய சீயோன் மலையைக் குறிக்கப்பயன்படுகின்றது. இதில் தாவீது அரசரினால் வெற்றிகொள்ளப்பட்டு தாவீதின் நகர் அழைக்கப்பட்ட இடத்தில் யெபூசைட் கோட்டை அமைந்திருந்தது. சீயோன் எனும் சொல் கோட்டை அமைந்திருந்த யெரூசலேம் பகுதியை குறிக்கப்பட்டது. பின்னர் இது சாலமோனின் எருசலேம் கோவிலைக் குறிக்கும், பொதுவாக யெரூசலேம் நகரைக் குறிக்கும் ஆகுபெயராகியது.
காபாலா எனும் யூதப் படிப்பிணை சீயோன் பற்றிய மறைபொருளைக் குறிக்கும்போது,[3] உண்மைப் பொருள் வெளிப்படும் முதலாம், இரண்டாம், மூன்றாம் யூத கோயில்களின் அதி பரிசுத்த இடம் அமைந்திருந்த இடத்திலிருந்து ஆன்மீக புள்ளியாக இருத்தல் என்கின்றது.
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ Longman, Tremper; Enns, Peter (2008). Dictionary of the Old Testament: Wisdom, Poetry & Writings: A Compendium of Contemporary Biblical Scholarship. InterVarsity Press. p. 936. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8308-1783-2.
- ↑ Anderson, Arnold Albert (1981). The book of Psalms. Wm. B. Eerdmans Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-551-00846-5.
- ↑ http://www.shemayisrael.co.il/parsha/dimension/archives/devarim.htm