சீயோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி

சீயோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி என்பது சென்னையில் உள்ள சீமோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி சங்கத்தால் நிறுவப்பட்டது. இந்திய விமானப்படை அதிகாரியாக பணியாற்றிய என் விசயன் அவர்களால் 1989ஆம் ஆண்டு இச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.?தற்பொழுது சென்னைக்கு அருகில் உள்ள தாம்பரத்தின் அருகில் 3 பள்ளிகள் இயங்கி வருகின்றன. சென்னை தாம்பரம் இரயில் நிலையத்தில் இருந்து 15 நிமிடத்தில் இப்பள்ளியை அடையலாம். மேலும் மீனம்பாக்கத்திலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலேயே அமைந்துள்ளது. இப்பள்ளியின் முதல்வர் மற்றும் தாளளர் ஆக டாக்டர் எ ன். விசயன் அவர்கள் உள்ளார். இப்பள்ளியானது குழந்தைகளின் எதிர்கால கனவை உண்மையாக்கிட உதவிடும் வகையில் குழந்தைகளை வளர்க்கும் வகையில் கல்வி போதிக்கப்படுகிறது. இந்தப்பள்ளி நாட்டின் மிக உயர்ந்த ஒழுக்க நெறிக்கான தரங்களை மாணவர்களிடையே உருவாக்கிட கடினமாக ஆராய்ந்து பல்வேறு விதிகளையும் பராமரிப்புகளையும் மேற்கொள்கிறது. இப்பள்ளியில் 8000 மாணவர்களும் 800க்கும் அதிகமான ஆசிரியர்களுடன் தமிழ்நாட்டின் 2வது பெரிய பள்ளியாக இயங்குகிறது. சென்னை மக்களிடையே இப்பள்ளியின் தனித்துவமான கண்டிப்பு மற்றும் போதனைகள் நல்ல தேர்ச்சி பெறுவதற்கு உதவுவதாக கருதப்படுகிறது. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வராக டாக்டர். எல். கே. விசயன் அவர்களால் 1985ஆம் ஆண்டு 11 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளியை மேம்படுத்துவதற்கு நிறைய போராடி உள்ளார். தற்போது இப்பள்ளி தமிழ்நாட்டின் முக்கிய பள்ளியாக விளங்குகிறது. பள்ளியின் முதல்வராக இருந்தாலும் இவர் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றுகிறார். 2007ஆம் ஆணடு முதல் இன்றுவரை ஆண்டுப் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி ஆலமரம் போல் வளர்ந்து 14000 மாணவர்கள் மற்றும் 600 ஆசிரியர்களுக்கு புகலிடமாக உள்ளது. 2009/10 கல்வி ஆண்டில் இப்பள்ளியின் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.

உள்கட்டமைப்பு

                15 ஏக்கர் பரப்பளவில் (6.1 றெக்டர்) கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கூடத்தில் தனி அறிவியல் ஆய்வுக்கூடம் மற்றும் நுலகங்கள் உள்ளன. பள்ளி வளாகத்தில் கிட்டத்தட்ட நான்கு மின் சாஸ்தாக்கள் உள்ளன. சென்னையில் உள்ள பள்ளிகளில் சிறந்த கட்டமைப்பு வசதிகள் உள்ளது. திறந்த வெளி அரங்கம் மற்றும் திறந்த வெளி  மேடை அமைப்பானது மிக முக்கிய பாராட்டு நிகழ்ச்சிகள், ஆண்டு விழா மற்றும் முதல் தர மாணாக்கர்களை பாராட்டவும் பயன்படுகிறது. மேலும் உடற்பயிற்சி மற்றும் செயல்பாட்டு வகுப்புகள் நடத்த உதவுகிறது.

மேற்கோள்கள்