சீறாப் புராணம்

(சீறாப்புராணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம் ஆகும். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் ஆவார்.

இதன் ஆசிரியரான உமறுப்புலவர், இந்நூலை முழுவதும் முடிப்பதற்கு முன்பே இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனு அகமது படைத்துள்ளார்.

சீறாப்புராண அமைப்பு

தொகு

இரண்டு பாகங்களில் அமைந்துள்ளது. முதற்பாகத்தில் 45 படலங்களும், இரண்டாவது பாகத்தில் 47 படலங்களும் என நூல் முழுவதும் 92 (45+47) படலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் 5027 பாடல்கள் அமைந்துள்ளன.

முதற்பாகம்

தொகு

முதற்பாகமானது இரண்டு காண்டங்களாக அமைந்துள்ளது. இப்பாகத்தில் மொத்தம் 45 படலங்கள் உள்ளன. அவை கீழ்க்கண்டவாறு பிரிந்துள்ளன.

1.விலாதத்துக் காண்டம் (பிறப்பியல் காண்டம்)

தொகு

முதலாவதாக அமைந்துள்ள இதில், மொத்தம் 24 படலங்கள் உள்ளன....................

  1. கடவுள் வாழ்த்துப் படலம்
  2. நாட்டுப் படலம்
  3. தலைமுறைப் படலம்
  4. நபியவதாரப் படலம்
  5. அலிமா முலையூட்டுப் படலம்
  6. இலாஞ்சனை தரித்த படலம்
  7. புனல் விளையாட்டுப் படலம்
  8. புகைறா கண்ட படலம்
  9. பாதை போந்த படலம்
  10. சுரத்திற் புனலழைத்த படலம்
  11. பாந்தள்வதைப் படலம்
  12. நதிகடந்த படலம்
  13. புலிவசனித்த படலம்
  14. பாந்தள் வசனித்த படலம்
  15. இசுறாகாண் படலம்
  16. கள்வரை நதிமறித்த படலம்
  17. சாமு நகர் புக்க படலம்
  18. கரம் பொருத்து படலம்
  19. ஊசாவைக் கண்ட படலம்
  20. கதீசா கனவு கண்ட படலம்
  21. மணம் பொருத்து படலம்
  22. மணம்புரி படலம்
  23. கஃபத்துல்லா வரலாற்றுப் படலம்

2.நுபுவ்வத்துக் காண்டம் (செம்பொருள் காண்டம்)

தொகு

இரண்டாவதாக அமைந்துள்ள இதில், மொத்தம் 21 படலங்கள் உள்ளன.

நபிப்பட்டம் பெற்ற படலம்

  1. தொழுகை வந்த வரலாற்றுப் படலம்
  2. தீனிலைக்கண்ட படலம்
  3. உமறுகத்தாபீமான் கொண்ட படலம்
  4. உடும்பு பேசிய படலம்
  5. உத்துபா வந்த படலம்
  6. அபீபு மக்கத்துக்கு வந்த படலம்
  7. மதியையழைப்பித்த படலம்
  8. தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்
  9. அபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம்
  10. ஈமான் கொண்டவர்கள் அபாசா ராச்சியத்துக்குப் போந்த படலம்
  11. மானுக்குப் பிணை நின்ற படலம்
  12. ஈத்தங்குலை வரவழைத்த படலம்
  13. ஒப்பெழுதித் தீர்ந்த படலம்
  14. புத்து பேசிய படலம்
  15. பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்
  16. பருப்பதராசனைக் கண்ணுற்ற படலம்
  17. அத்தாசீமான் கொண்ட படலம்
  18. சின்களீமான் கொண்ட படலம்
  19. காம்மாப் படலம்
  20. விருந்தூட்டுப் படலம்

இரண்டாம் பாகம்

தொகு

இப்பாகத்தில் இறுதிக்காண்டமான, இசிறத்துக்காண்டம்(ஹிஜிறத்துக் காண்டம்-செலவியல் காண்டம் ) அமைந்துள்ளது. இக்காண்டம், மொத்தம் 47 படலங்களைப் பெற்றுள்ளது.அவை வருமாறு;-

  1. ஈமான் கொண்ட படலம்
  2. மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம்
  3. யாத்திரைப் படலம்
  4. விடமீட்ட படலம்
  5. சுறாக்கத்துத் தொடர்ந்த படலம்
  6. உம்மி மகுபதுப் படலம்
  7. மதீனம்புக்க படலம்
  8. கபுகாபுப் படலம்
  9. விருந்திட்டீமான் கொள்வித்த படலம்
  10. உகுபான் படலம்
  11. சல்மான் பாரிசுப் படலம்
  12. ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம்
  13. ஓநாய் பேசிய படலம்
  14. வத்தான் படைப் படலம்
  15. பாத்திமா திருமணப் படலம்
  16. சீபுல் பகுறுப் படலம்
  17. புவாத்துப் படலம்
  18. அசீறாப் படலம்
  19. பத்னுன்ன குலாப் படலம்
  20. பத்றுப் படலம்
  21. சவீக்குப் படலம்
  22. குதிரிப் படலம்
  23. தீயம்றுப் படலம்
  24. அபிறாபிகு வதைப் படலம்
  25. அசனார் பிறந்த படலம்
  26. அபூத்தல்ஹா விருந்துப் படலம்
  27. உகுதுப் படலம்
  28. அமுறாப் படலம்
  29. ககுபு வதைப் படலம்
  30. சுகுறாப் படலம்
  31. பதுறு சுகுறாப் படலம்
  32. உசைனார் பிறந்த படலம்
  33. தாத்துற் றஹ்ஹாக்குப் படலம்
  34. சாபிர் கடன் றீர்த்த படலம்
  35. முறைசீக்குப் படலம்
  36. கந்தக்குப் படலம்
  37. உயை வந்த படலம்
  38. பனீ குறைலா வதைப் படலம்
  39. லுமாமீமான் கொண்ட படலம்
  40. செயினபு நாச்சியார் கலியாணப் படலம்
  41. ஒட்டகை பேசிய படலம்
  42. மழையழைப்பித்த படலம்
  43. அந்தகன் படலம்
  44. கவுலத்தை விட்டுக் கூட்டின படலம்
  45. உமுறாவுக்கு போன படலம்
  46. சல்மா பொருத படலம்
  47. உறனிக் கூட்டத்தார் படலம்

ஆதாரம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீறாப்_புராணம்&oldid=4137446" இலிருந்து மீள்விக்கப்பட்டது