சீலைக்காரி அம்மன்
சீலைக்காரி அம்மன் என்பவர் நாட்டுப்புற பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இறந்த கணவன் நினைவாகவோ, குடும்ப வன்முறை காரணமாகவோ தீக்குளித்து இறந்து போன பெண்களை சீலைக்காரி என்ற பொதுப் பெயரிட்டு அழைக்கின்றனர். இவ்வாறு தீக்குளித்து இறந்து போவதில் உடன்கட்டை ஏறும் வழக்கமும் ஒன்று.
பெயர்க்காரணம்
தொகுதீக்குளித்து இறந்த பெண்ணின் சீலை முந்தானை எரியாமல் இருந்தது என்கின்றனர். அதனால் சேலைக்காரி என்ற பெயரில் அப்பெண்ணை வணங்குகின்றனர். சில தொன்மங்களில் அப்பெண் கழுத்தில் போட்டிருந்த மாலை, கையில் வைத்திருந்த எலுமிச்சை பழம் ஆகியவையும் எரியாமல் இருந்ததைக் கொண்டு மாலைக்காரி எனவும் அழைக்கின்றனர்.
வேறு பெயர்கள்
தொகுசீலை, சேலை என ஆடையுடைய பெயரை வைத்தும், தீயில் பாய்ந்தவள் என காரணப்பெயரிட்டும் அழைக்கின்றனர்.
- சீலைக்காரி
- சீலைக்காரி அம்மன்
- சேலைக்காரி
- சேலையம்மன்
- தீப்பாஞ்சி அம்மன்
- தீப்பாய்ஞ்ச அம்மன்
- தீப்பாய்ந்தாள்
- மாலைக்காரி
தொன்மம்
தொகுஒரே பெயரில் அழைக்கப்பட்டாலும் இந்த தெய்வங்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக தீப்பாய்ந்தவர்கள் என்பதால் எண்ணற்ற தொன்மக் கதைகள் இவர்களுக்கு உள்ளன.
சிலமலைப்பட்டி சீலைக்காரி அம்மன்
தொகுமதுரை மாவட்டம் சிலமலைப்பட்டியில் வசித்து வந்த கோப்பம்மாள் என்ற தொட்டியம் நாயக்கர் பெண்ணும், சக்கிரியர் ஆணும் சிறு வயதிலிருந்தே நட்புடன் இருந்தார்கள். மாடுகளை ஒன்றாக மேய்ப்பதும், ஒன்றாக உணவருந்துவமும் அவர்களின் வழக்கமாக இருந்தது. இவர்களின் நட்பு குறித்த புரிதல் இல்லாமல் மற்ற மாடுமேயிக்க வந்தவர்கள் கோப்பம்மாள் பெற்றோர், உறவினர்களிடம் தவறாக எடுத்து கூறியதால், கோபமுற்றவர்கள் கோப்பம்மாளை தண்டிக்கின்றனர். [1]
தன்மீது தவறு இல்லை என எடுத்துக்கூறியும் கோப்பம்மாளின் உறவினர்கள் கேட்காமல் தண்டித்ததால் மனமுடைந்த அவள் அருகிலுள்ள பானைகள் சுடும் சூலையில் இறங்கி தன்னை மாய்த்துக் கொண்டாள். [2]
கோயில்கள்
தொகு- 87ஊர் ஆப்பாடியான் பங்காளி மலசை கிழவன் வாரிசு 7 கிழவன் சாம்பவர்(பறையர்) குடிபாட்டு சீலைக்காரி அம்மன் கோயில் பிச்சனாபட்டி,குஜிலியம்பாறை,திண்டுக்கல்.
- சிலமலைப்பட்டி சீலைக்காரி அம்மன் கோவில், மதுரை மாவட்டம்.
- பேரையூர் சீலைக்காரி அம்மன் கோவில்.[3]
- தருமபுரி மாவட்டம் மல்லசமுத்திரம் தீப்பாஞ்சி அம்மன் கோவில்
- அருள்மிகு ஸ்ரீ சின்ன அவினாசி மொண்டிப்பிள்ளை திருக்கோவில், கோட்டநத்தம், குஜிலியம்பாறை தாலுக்கா, திண்டுக்கல் மாவட்டம்
ஆதாரங்கள்
தொகு- ↑ http://www.periyarpinju.com/new/component/content/article/60-january-2013/928-sami-is-a-term-life-maytta.html
- ↑ http://www.periyarpinju.com/new/component/content/article/60-january-2013/928-sami-is-a-term-life-maytta.html
- ↑ https://www.maalaimalar.com/devotional/worship/2021/06/28124255/2772161/amman-temple-varushabishekam.vpf