சீவகன்

சீவக சிந்தாமணி நூலில் வரும் தலைவன்

சீவகன், ஏமாங்கத நாட்டு மன்னர் சச்சந்தன் - ராணி விசயை இணையரின் மகன் ஆவார். கட்டியங்காரன் என்னும் அமைச்சன் சூழ்ச்சியால் மன்னன் சச்சந்தனைக் கொன்று, ஏமாங்கத நாட்டினைக் கைப்பற்றினான். குழந்தைப் பருவம் முதற்கொண்டு சீவகனைக் கந்துக்கடன் என்னும் வாணிகன் வளர்த்து வந்தான். பருவ வயதில், சீவகன் தன் ஆற்றலால் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கின்றான்.

பின்னர் சீவகன் தன் தந்தை இழந்த நாட்டை கைப்பற்றுவதற்கு, தாயின் அறிவுரையோடு, மாமன் கோவிந்தனின் துணைக்கொண்டு, அமைச்சர் கட்டியங்காரனுடன் போரிட்டு ஏமாங்கத நாட்டை வென்றான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு, இறுதியில் வீடுபேறு அடைகிறான். அச்செய்திகளை விரிவாக விளக்கிக் கூறும் நூலே சீவக சிந்தாமணி ஆகும். சீவக சிந்தாமணி எழுதியவர் திருத்தக்கதேவர். [1]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீவகன்&oldid=2977983" இருந்து மீள்விக்கப்பட்டது