சீவுக்குச்சி விளையாட்டு
சீவுக்குச்சி விளையாட்டு அண்மைக்காலத் தமிழர் விளையாட்டுகளில் ஒன்று. இது சிறியதும், செலவு இல்லாததும் ஆகும். இரட்டைப் படை எண்களில், பத்து, பன்னிரண்டு எண்ணிக்கையில் தென்னை மட்டையில் இருந்து எடுக்கப்படும் ஈர்க்குச்சி(ஈர்க்கு) / சீவுக்குச்சிகளை எடுத்து அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒன்றை மட்டும் படுக்கைவாட்டில் இவற்றின் இடயில் வைத்து கீழே வீச வேண்டும். பின்னர் மற்றோர் குச்சியில் படாதவாறு ஒவ்வொரு குச்சிகளையும் வெளியே எடுக்க வேண்டும். மற்றோர் குச்சி அசைந்தால் விளையாடுபவர் தோற்றவர் ஆகிவிடுவார். ஒரு நேரத்தில் ஒருவரே இவ்விளையாட்டை விளையாட முடியும். விளையாடும் நபர்கள் மாற்றி மாற்றி விளையாடுவர்.