சீ. டீ. வேணுகோபால்
சீ. டீ. வேணுகோபால் (C.T. Venugopal, 1907-1972) ஒரு இந்திய சிவில் சர்வீசஸ் அதிகாரி ஆவார். இவர்இந்திய இரயில்வே கணக்குச் சேவைகளின் உறுப்பினராக இருந்தார்.
குடும்பம்
தொகுவேணுகோபால், சி. திருவெங்கடாச்சாரி மற்றும் பத்மமம்மாளின் இரண்டாவது மகனாவார். அவரது மூத்த சகோதரர் கணிதவியலாளர் C.T. ராஜகோபால் மற்றும் அவரது இளைய சகோதரர் தத்துவஞானி சி.டி.கே. சாரி. இவரது சகோதரி கமலா கிருஷ்ண மேனனின் கீழ் பாதுகாப்பு செயலாளராக பணிபுரிந்த ஆர். பீ. சாரதியை மணந்தார்.
தொழில்
தொகு1930 இல் ஐஆர்ஏஎஸ் அமைப்பதற்கான முதன்மை அதிகாரி ஆவார்.[1] இந்திய மற்றும் பாக்கிஸ்தான் பிரிவினையின் போது இரயில்வே சொத்துக்களைப் பிரிப்பதற்கான பொறுப்பாளராக அவர் கருதப்பட்டார். அவர் ரயில்வே வாரிய உறுப்பினராகவும் இருந்தார். கே.பீ. முஷான்-உடன் இணைந்து அவர் இந்திய ரயில்வே புத்தகத்தை எழுதினார்.[2] ஒவ்வொரு வருடமும் நினைவு விரிவுரைகளுடன் ஐஆர்ஏஎஸ் சீ. டீ. வேணுகோபாலை நினைவுகூருகிறது.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅவர் இந்து மதத்திலிருந்து கிறித்துவத்திற்கு மாற்றினார், மேலும் கிறித்துவிற்கு சாட்சியம், உள்ளிட்ட மத இதழ்களையும் புத்தகங்களையும் வெளியிட்டார்.[4] ஓய்வு பெற்ற பிறகு, கிருத்தவ மருத்துவக் கல்லூரிக்கு அருகில் வேலூரில் குடியேறினார். 1972 ல் இறந்து போனார்.
கிறிஸ்துவர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சீ. டீ. வேணுகோபால் பெயரில் பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "IRAS". Indian Railways.
- ↑ C.T.Venugopal & K.P.Mushran. Indian Railways.
- ↑ "Memorial Lectures" (PDF). Archived from the original (PDF) on 2011-12-15. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
- ↑ "Witness to Christ".