சுக்கா மாவட்டம்

சுக்கா மாவட்டம் (Chukha District) பூட்டான் நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில் ஒன்றாகும் . இம்மாவட்டத்தின் முக்கிய நகரம் பியூன்ட்ஷோலிங் ஆகும். இந்நகரமே இந்தியாவிற்கும் பூட்டானுக்குமான நுழைவாயில் ஆகும். சுக்கா பூடானின் வர்த்தக மற்றும் பொருளாதார நகராக விளங்கிகிறது. பூட்டானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுக்கா நகரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கு உள்ள சுக்கா நீர்மின் நிலையம் மற்றும் டாலா நீர்மின் நிலையம் நாட்டின் மின்தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும் இந்நகரத்தின் பூடான் கார்பைடு கெமிக்கல் லிமிட்டட் மிகப்பழமையான ஒன்றாகும்.

சுக்கா மாவட்டம்
சுக்கா மாவட்டம்
சுக்கா மாவட்டம்

மொழிகள்

தொகு

இந்நகரத்தில் ட்ஸோங்கா, நக்லோப், லோக்பு ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.

ஜிவோக்கள்

தொகு

கிராமங்களின் தொகுப்பு ஜிவோக்கள்[1] என அழைக்கப்படும். சுக்கா 11 ஜிவோக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

  • பிஜாச்சோ
  • போங்கோ
  • சாப்சா
  • டாலா
  • டுங்னா
  • கிலிங்
  • கெட்னா
  • லாக்சினா
  • மெட்டாகா
  • பியூன்ட்ஷோலிங்
  • சாம்பிலிங்

மேற்கோள்கள்

தொகு
  1. "Chiwogs in Chukha" (PDF). Election Commission, Government of Bhutan. 2011. Archived (PDF) from the original on 2011-10-02. பார்க்கப்பட்ட நாள் 2011-07-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்கா_மாவட்டம்&oldid=3575273" இலிருந்து மீள்விக்கப்பட்டது