சுக்கா ராமைய்யா
சுக்கா ராமைய்யா (Chukka Ramaiah) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் ஆவார்.[1][2] 1925 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.)[3] ஐதராபாத்தின் நல்லகுண்டாவில் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்தில் கற்பித்ததற்காக இவர் "ஐஐடி ராமையா" என்று அழைக்கப்படுகிறார். தெலுங்கானாவின் முன்னணி செயற்பாட்டாளராகவும் இவர் அறியப்படுகிறார்.[4]
சுக்கா ராமைய்யா Chukka Ramaiah | |
---|---|
பிறப்பு | 20 நவம்பர் 1925 கூடூர் கிராமம், வாராங்கல் மாவட்டம், தெலங்காணா |
பணி | கல்வியாளர், செயல்பாட்டாளர், சட்டமன்ற உறுப்பினர் |
தொழில்
தொகுதெலுங்கானா பிராந்தியத்தின் கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவம் இருந்ததை எதிர்த்து ஐதராபாத்து மாநிலத்தில் இராமையா போராடினார். ஏழைகளுக்கு உதவுவதில் தீவிரமாக பங்கேற்ற இவர், தலித்துகளுக்கும் நலிந்தவர்களுக்கும் உதவி செய்ததற்காக இவரது பிராமண சமூகத்தால் வெளியேற்றப்பட்டார். மகாத்மா காந்தியின் தீண்டாமை இயக்கத்தில் சேர்ந்து தனது கிராமத்தில் பின்தங்கிய பிரிவுகளை சீர்திருத்த முயன்றார். ரசாக்கர் இயக்கத்திற்கு எதிரான கிளர்ச்சியில் தீவிரமாக பங்கேற்ற இவர் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.[5]
அரசியல் வாழ்க்கை
தொகு2007 ஆம் ஆண்டில் வாரங்கல், கம்மம் மற்றும் நல்கொண்டா ஆசிரியர் தொகுதியில் இருந்து தெலுங்கானா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இராமையா, 6 ஆண்டுகள் தொடந்து பதவியில் இருந்தார். பல்வேறு தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களின் தளத் தலைவராக இருந்தார்.[1]
செயல்பாடு
தொகுதெலுங்கானா ஐதராபாத்து இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை அமைப்பதற்கான போராட்டத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இருப்பினும், இவரது விருப்பத்தை மீறி, ஐதராபாத் அருகே அரசாங்கம் அதை அமைத்தது.[1]
தெலுங்கானா மாநிலத்திற்கு வலுவான ஆதரவாளராக இருந்த இவர், இப்பகுதியின் வறுமை மற்றும் பின்தங்கிய நிலை குறித்து அடிக்கடி பேசினார்.[1]
எழுத்து வாழ்க்கை
தொகுஇராமையா தெலுங்கில் 16 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார், முக்கியமாக கல்வியை மையமாகக் கொண்ட சின்ன பாதம் மற்றும் தேசதேசல்லோ வித்யா உள்ளிட்ட.[6] புத்தகங்கள் இவர் எழுதியவையாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Andhra Pradesh / Nalgonda News : Chukka Ramaiah links MLC seat to 'social issues'". The Hindu. 2006-10-27. Archived from the original on 2008-09-06. பார்க்கப்பட்ட நாள் 2013-10-04.
- ↑ "Andhra Pradesh / Nizamabad News : Chukka Ramaiah against setting up IIT near Hyderabad". The Hindu. 2006-12-28. Archived from the original on 2012-11-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-04.
- ↑ "Chukka Ramaiah – The IIT Giant of India". The Better India. 4 December 2014. பார்க்கப்பட்ட நாள் 9 March 2020.
- ↑ "TRS rejects Justice Srikrishna panel report on Telangana". Indian Express. 2011-01-06. பார்க்கப்பட்ட நாள் 2013-10-04.
- ↑ Bhandaram, Vishnupriya (5 April 2012). "Social activism and algebra". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 29 June 2018.
- ↑ "Andhra Pradesh / Hyderabad News : Chukka Ramaiah's books released". The Hindu. 2008-11-21. Archived from the original on 2012-11-07. பார்க்கப்பட்ட நாள் 2013-10-04.