சுக்ரி மொம்மகௌடா

சுக்ரி பொம்மகௌடா இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள ஹாலக்கி ஒக்கலிகா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற பாடகர் ஆவார். கலைகளுக்கு இவர் செய்த பங்களிப்புகள் மற்றும் பாரம்பரிய பழங்குடி இசையைப் பாதுகாப்பதில் இவர் செய்த பணிகளுக்காக இந்தியாவின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான பத்மசிறீ விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

வாழ்க்கை

தொகு

பொம்மகௌடா வடகன்னட மாவட்டத்தில் பதிகேரியில் உள்ள ஹலாக்கி ஒக்கலிகா பழங்குடி இனத்தில் பிறந்தார். 16 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. மற்றொரு குழந்தையை தத்தெடுத்தனர். [1]

தொழில்

தொகு

தனது குழந்தைப்பருவத்திலேயே தனது தாயிடமிருந்து பாடக் கற்றுக் கொண்டார். மேலும், ஹலாக்கி ஒக்கலிகா பழங்குடியினரின் பாரம்பரிய இசை மற்றும் பாடல்களைப் பாதுகாக்க பணியாற்றி வருகிறார். [1] கணவர் இறந்ததைத் தொடர்ந்து, கர்நாடகாவில் ஹலாக்கி ஒக்கலிகா பழங்குடியினரின் பாரம்பரிய இசையை நிகழ்த்தத் தொடங்கினார். இவர் தனது இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாரம்பரிய இசை மற்றும் பாடல்களைக் கற்பிக்கிறார். மேலும், இவர் "ஹலாக்கியின் நைட்டிங்கேல்" என்று வர்ணிக்கப்படுகிறார். [2] வாய்வழி மரபின் ஒரு பகுதியாக பழங்குடிப் பாடல்களை பாதுகாப்பதில் இவர் செய்த பணிக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். [3] [4] அகில இந்திய வானொலி, கர்நாடக ஜனபதா அகாடமி ஆகியவை பொம்மகவுடாவுடன் இணைந்து இந்த பாடல்களைப் பதிவுசெய்து, மொழிபெயர்த்து, பாதுகாக்கின்றன.

1988 ஆம் ஆண்டில் இவரது பணிகளை கர்நாடக மாநில அரசு அங்கீகரித்தது, கலை மற்றும் இசையில் இ வர் செய்த பங்களிப்புகளுக்காக நாடோஜா விருது, ஜனபதா விருது உள்ளிட்ட பல மாநில விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார். [1] 2017 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிக உயர்ந்த குடிமக்கள் கௌரவங்களில் ஒன்றான பத்மசிறீ விருது வழங்கப்பட்டபோது இவரது பணி தேசிய அங்கீகாரத்தைப் பெற்றது.

இசையில் தனது பணிக்கு மேலதிகமாக, கர்நாடகாவின் பாடிகேரியில் கிராம ஊராட்சி உறுப்பினரானார். [1] கல்வியறிவற்றவர் என்றாலும், இவர் கல்வியறிவுக்காக, குறிப்பாக சிறுமிகளிடையே பிரச்சாரம் செய்துள்ளார். மேலும் தனது வளர்ப்பு மகன் ஆல்கஹால் விஷத்தால் இறந்ததைத் தொடர்ந்து, தனது பகுதியில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்துள்ளார்.

பிரபலமான கலாச்சாரத்தில்

தொகு

கர்நாடக நடுநிலைப்பள்ளி பாடப்புத்தகத்தில், இசையில் இவர் செய்த பங்களிப்புகள் தொடர்பாக கட்டுரை இடம்பெற்றுள்ளது. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Unsung hero of Karnataka, Sukri Bommagowda wins Padma Shri award". The News Minute (in ஆங்கிலம்). 2017-01-25. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
  2. "PV Sindhu, Sakshi Malik to be in Padma Bhushan list". The Indian Express (in ஆங்கிலம்). 2017-01-24. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
  3. TNN (26 January 2017). "Padma: Padma for these pearls of Karnataka". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
  4. Rao, Sunitha R. (31 October 2014). "Live singing is the secret of Sukri's success". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்ரி_மொம்மகௌடா&oldid=3132789" இலிருந்து மீள்விக்கப்பட்டது