சுக்விந்தர் குமார்
சுக்விந்தர் குமார் (Sukhwinder Kumar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலிதளம் கட்சியில் உறுப்பினராக இருந்தார். பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவிலுள்ள தயானந்த் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார். மருத்துவரான இவர் 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பங்கா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]
சுக்விந்தர் குமார் சுகி Sukhwinder Kumar Sukhi | |
---|---|
இந்திய பஞ்சாபின் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2017 மற்றும் 2022 | |
முன்னையவர் | தர்லோசன் சிங் |
தொகுதி | பங்கா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 06/12/1960 குணச்சூர் கிராமம் |
அரசியல் கட்சி | சிரோமணி அகாலி தளம் |
துணைவர் | அஞ்சு |
வாழிடம்(s) | நவன்சகர், சாகித் பகத் சிங் நகர் |
தொழில் | அரசியல்வாதி |
தொகுதி
தொகுசுக்விந்தர் குமார் பங்கா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பங்கா சட்டமன்றத் தொகுதியில் சிரோமணி அகாலி தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினரான ஆம் ஆத்மி கட்சியின் அர்ச்சோட்டை 1893 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். [2] [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sukhwinder Kumar(SAD):Constituency- BANGA (SC)(NAWAN SHAHR) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 2021-11-20.
- ↑ "BANGA Election Result 2017, Winner, BANGA MLA, Punjab" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-20.
- ↑ "SUKHWINDER KUMAR Won with 45256 votes - 2017 Banga - Punjab Assembly Election Winner, LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates | India.com" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-20.