சுசானி அயூப்

ஆத்திரிய-ஈராக்கிய எழுத்தாளர்

சுசானி அயூப் (Susanne Ayoub) என்பவர் ஓர் ஆத்திரிய-ஈராக்கிய எழுத்தாளர் ஆவார். 1956 ஆம் ஆண்டு பாக்தாத்தில் பிறந்தார். ஒரு பத்திரிகையாளராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இயங்கி வருகிறார். ஆம்பர்க்கில் ஆஃப்மேன் அண்ட் கேம்பே நிறுவனம் 2004 ஆம் ஆண்டு வெளியிட்ட எங்கெல்சுகிஃப்ட் போன்ற குற்றப் பின்னணி நாவல்களுக்காக சுசானி முதன்மையாக அறியப்படுகிறார். பன்னாட்டு அளவில் இது வெற்றி பெற்றது.[1] சுசானியின் படைப்புகள் பெரும்பாலும் பெண்களின் உண்மையான அனுபவங்களை ஈர்க்கிறது. பின்னர் புனைகதையாக செயலாக்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டில் சுசானி அயூப்

2014 ஆம் ஆண்டு ஆர்பில்ட்டு" விளக்கக்காட்சிக்காக சுசானி அயூப்புக்கு வானொலி கார்ல் ரென்னர் பரிசு வழங்கப்பட்டது.[2][3][4]

மேற்கோள்கள் தொகு

  1. "Susanne Ayoub Engelsgift" (in ஜெர்மன்). Perlentaucher.de. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
  2. "Renner-Preis für Esther Mitterstieler und Erich Moechel". derStandard.at. 3 December 2014. http://derstandard.at/2000008957121/Renner-Preis-fuer-Esther-Mitterstieler-undErich-Moechel. 
  3. "Auszeichnungen Weltbestes Radio". ORF.at இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402172110/http://oe1.orf.at/featureauszeichnungen. 
  4. "Prinzessin Vukobrankovics. Die drei Leben der Elisabeth Thury". ORF.at. 15 February 2014. http://oe1.orf.at/programm/363635. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசானி_அயூப்&oldid=3410062" இலிருந்து மீள்விக்கப்பட்டது