சுசான் மெக்கன்னா இலாலர்

சுசான் மெக்கன்னா இலாலர் (Susan McKenna-Lawlor) ஓர் அயர்லாந்து வானியற்பியலாளர் ஆவார். இவர் மைநூத் பல்கலைக்க்ழகத்தில் செய்முறை இயற்பியல் பேராசிரியராக உள்ளார்.

இளமையும் வாழ்க்கைப்பணியும்

தொகு

இவர் 1935 மார்ச்சு 3 இல் டப்ளினில் பிறந்தார். இவர் டப்ளினில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரியில் செய்முறை இயற்பியல் கற்றார்.[1]

இவர் 1780 முதலான அயர்லாந்து வானியல் வளர்ச்சி எனும் கட்டுரையை 1968 இல் வானியல் பதிவுகள் இதழில் எழுதினார்.[2]

அயர்லாந்து விண்வெளித் தொழில்நுட்பக் குழுமம்

தொகு

இவர் ஐரோப்பிய விண்வெளி முகமையின் கியோட்டோ திட்டச் செய்முறையின் முதன்மை ஆய்வாளர் ஆவார். இவர் 1986 இல் விண்வெளித் தொழில்நுட்பக் குழுமத்தை நிறுவினார். இது விண்வெளி ஆய்வுக்கான கருவிகளை உருவாக்கும் குழுமம் ஆகும். இதற்கு தெர்மோட் தெசுமாண்டு முதலீடு செய்தார். இக்குழுமத்தின் மேலாண்மை இயக்குநராக மெக்கன்னா இலாலர் உள்ளார்.

இவர் 1988 போபோசு விண்கலத்துக்கான 30 கிலோமின்னன்வோல்ட் முதல் பல மெகாமின்னன்வோல்ட் ஆற்றல் உள்ள துகள்களைக் கண்டறியும் துகள்காணியை உருவாக்கும் பன்னாட்டு அறிவியலார் குழுவுக்குத் தலைமை தாங்கி வழிநட்த்தினார். இதன் வெற்றியால் 1994 இல் செவ்வாய்த் திட்டத்துக்கான சோவியத் அறிவியலாளர்கள் இதேபோன்ற கருவி உருவாக்கத்துக்குப் பங்களிக்குமாறு இவரது உதவியை நாடினர்.[3]

இவர் ஐ.வி.முகமையின் செவ்வாய்த் திட்டச் சூரியக் கண்காணிப்புக் கருவியை உருவாக்கித் தந்துள்ளார்.

அயர்லாந்து விண்வெளித் தொழில்நுட்பக் குழுமம் உரோசெட்டா விண்கலதின் கல மின் ஆதரவு அமைப்புச் செயலி அணியை வடிவமைத்து நல்கியது. இவர் அயர்லாந்து சார்பாக உரோசெட்டாத் திட்டத்தின் வால்வெள்ளி 67பி/சூரியிமோவ்-கெராசிமென்கோவில் தரையிறங்கும் பிளே விண்கல முடுக்கக் குழுவில் பணியாற்றினார்.[1]

இவர் தனது 1988 ஆம் ஆண்டைய நூலில் மின்னுவதெல்லாமே நோக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்இவர் அயர்லாந்து தேசியப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினரும் மாய்னூத் பல்கலைக்கழக ஆளுங்குழுவின் உறுப்பினரும் ஆவார்.

இவர் 1986 ஆம் ஆண்டின் விருதுக்கானவர் பட்டியலில் வெற்றிபெற்றவருள் ஒருவராவார். இவர் பன்னாட்டு வான்வலவர் கல்விக்கழகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் 2005 இல் தகைமை முனைவர் பட்ட்த்தை வானியற்பியல் பங்களிப்புக்காக உல்சுதர் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 O'Connell, Claire (17 January 2014). "Irish scientist's role in comet-chasing Rosetta mission". Silicon Republic. https://www.siliconrepublic.com/innovation/2014/01/17/irish-scientists-role-in-comet-chasing-rosetta-mission. 
  2. McKenna-Lawlor, Susan M.P. (1968). "Astronomy in Ireland from 1780". Vistas in Astronomy 9: 283–296. 
  3. Henbest, Nigel (11 March 1989). "Probe reveals Mars may have radiation belts". New Scientist: 34. https://books.google.com/books?id=1RCzEaxzsbYC&lpg=PA34&dq=susan%20mckenna%20lawlor&pg=PA34#v=onepage&q&f=false. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசான்_மெக்கன்னா_இலாலர்&oldid=2716095" இலிருந்து மீள்விக்கப்பட்டது