சுசில் கொய்ராலா நினைவு அறக்கட்டளை
சுசில் கொய்ராலா நினைவு அறக்கட்டளை (Sushil Koirala Memorial Foundation) நேபாளத்தின் மறைந்த பிரதமர் சுசில் கொய்ராலாவின் நினைவாக 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சனநாயகம், சமூக-பொருளாதார சீர்திருத்தம் மற்றும் திறந்த சமுகக் கொள்கைகளின் அடிப்படையில் மூலோபாய சிந்தனைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலோசனையை பிரச்சாரத்தின் மூலம் சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டது.[1] [2] [3]
सुशील कोइराला मेमोरियल फाउन्डेसन | |
சுருக்கம் | எசு.கே.எம்.எப் |
---|---|
Named after | சுசில் கொய்ராலா |
வகை | அரசு சாரா அமைப்பு |
தலைமையகம் | தபாசி, காட்மாண்டு |
தலைமையகம் |
|
தலைவர் | சசாங்கா கொய்ராலா |
உறுப்பினர் செயலர் | அதுல் கொய்ராலா |
வலைத்தளம் | http://www.sushilkoiralamemorialfoundation.org/ |
பணிகள்
தொகுசுசில் கொய்ராலா நினைவு அறக்கட்டளையானது கலந்துரையாடல் நிகழ்ச்சி போன்ற பல நிகழ்வுகளை தீவிரமாக ஏற்பாடு செய்து ஆதரவளித்துள்ளது. பல்வேறு விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்துள்ளது. [4] பிப்ரவரி 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மதன் பண்டாரி விளையாட்டு அகாடமியுடன் இணைந்து நேபாளத்தின் 1 ஆவது கிராண்டு துடுப்பாட்டத் திருவிழாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது. இப்போட்டிகளின்போது திறமையானவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு துடுப்பாட்ட உபகரணங்களை வழங்குவதன் மூலம் அறக்கட்டளை தன் பங்கை ஆற்றியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sushil Koirala Memorial Foundation". www.sushilkoiralamemorialfoundation.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-08-06.
- ↑ "Sushil Koirala Memorial Foundation launched". myrepublica.com. பார்க்கப்பட்ட நாள் 12 August 2017.
- ↑ "Sushil Koirala foundation established". annanote.com. பார்க்கப்பட்ட நாள் 12 August 2017.
- ↑ "Sushilkoirala Memorial Foundation". www.sushilkoiralamemorialfoundation.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-09.