சுசீலா அனிதா பானர்சி

சுசீலா அனிதா பானர்சி (Susila Anita Bonnerjee) 1800 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் பெண்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்காக வாதிட்ட ஒரு மருத்துவர், கல்வியாளர் மற்றும் மகளிர் வாக்குரிமைப் போராளியாவார்.[1]

வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் நிறுவனரும் முதல் தலைவருமான உமேசு சந்திர பானர்சி மற்றும் ஏமாங்கினி மோதிலால் ஆகியோருக்கு சுசீலா அனிதா பிறந்தார். ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ஒருவராக சுசீலா அனிதா இருந்தார். சுசீலாவுக்கு நான்கு சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் குடும்பத்தில் அங்கத்தினர்களாக இருந்தனர். இங்கிலாந்தின் கிரோய்தன் நகரில் இவர் வசித்து வந்தார், கல்வி கற்றார். அங்கு இவரது பெற்றோருக்கு ஒரு வீடு இருந்தது. அவர்கள் கொல்கத்தாவில் உள்ள தங்கள் மூதாதையர் வீட்டிற்கு அடிக்கடி பயணம் செய்தனர். [1] சுசீலா அனிதா பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியான பாக்கித்தான் லாகூரில் 1920 ஆம் ஆண்டு இறந்தார் [1]

கல்வி மற்றும் தொழில் தொகு

சுசீலா அனிதா இங்கிலாந்தில் இருக்கும் பெண்கள் கிரோய்தன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் கேம்பிரிட்ச்சின் நியூங்ஙாம் கல்லூரியில் பயின்றார், அங்கு இவர் இயற்கை அறிவியல் பாடத்தைப் பயின்றார். [2] இலண்டன் நகரில் இருந்த பெண்கள் மருத்துவப் பள்ளியில் சுசீலா மருத்துவம் படித்து 1899 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். [2] 1800 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் மருத்துவப் பயிற்சி பெற்ற இந்தியப் பெண்களின் குழுவில் சுசீலா அனிதாவும் ஒருவராக இருந்தார். உருக்மாபாய், ஆலிசு சோராப்சி, மற்றும் மெர்பாய் வாக்கீல் போன்றவர்கள் மற்ற இந்தியப் பெண்கள் இக்குழுவில் இருந்தனர். பின்னர் இந்தியாவுக்குத் திரும்பிய சுசீலா பெண்களுக்கான மருத்துவத் தொழிலை நிறுவவும் பெண்களுக்கான கல்வி நிறுவனங்களைத் திறக்கவும் உதவினார்.

சுசீலா அனிதா ஆரம்பத்தில் இராயல் இலவச மருத்துவமனையில் மருத்துவம் செய்தார் . பின்னர் இவர் இந்தியாவின் கொல்கத்தா மற்றும் தில்லியில் உள்ள கேம்பிரிட்ச்சு மிசன் மருத்துவமனையில் உள்ள தனது குடும்ப வீட்டிற்கு திரும்பினார். [1] பிளேக் தொற்றுநோய்களின் போது சுசீலா மட்டுமே தனது மிசன் மருத்துவமனையில் இருந்தார். இந்த நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது இவரது சொந்த ஆரோக்கியத்தை பாதிக்கும் என்றும் அவரது சகோதரி சானகி தனது நினைவுக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். [2] தனது சொந்த நடைமுறையை நிறுவுவதில் அவரது குடும்பத்தில் இருந்து புறப்பட்ட எதிர்ப்புகளை எதிர்கொண்டு, சுசீலா 1906 ஆம் ஆண்டு கேம்பிரிட்ச்சுக்குத் திரும்பினார். ஆனால் இவரால் அங்கு ஒரு சுயாதீன நடைமுறையை நிறுவ முடியவில்லை. குடும்ப வரலாற்றில் அவரது சகோதரி சானகியால் பதிவு செய்யப்பட்ட இனவெறி மற்றும் துன்புறுத்தல் சம்பவங்களை இவர் அடிக்கடி எதிர்கொண்டார். [3] சுசீலா பின்னர் நியூங்ஙாம் கல்லூரியில் உள்ள பால்ஃபோர் ஆய்வகத்தில் சேர்ந்தார், அங்கு இவர் ஆராய்ச்சி செய்து கிர்டன் மற்றும் நியூங்ஙாம் கல்லூரிகளில் மாணவர்களுக்கு உடலியல் கற்பித்தார். [1]

1911 ஆம் ஆண்டில், சுசீலா இந்திய மகளிர் கல்வி சங்கம் என்ற பெயரில் ஒரு தனியார் அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இங்கிலாந்தில் உள்ள இந்தியப் பெண்களுக்கு கல்வி உதவி செய்ய நிதி திரட்ட பணியாற்றினார். இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்களுக்கான வாக்குரிமை இயக்கத்தில் இவர் சுறுசுறுப்பாக ஈடுபட்டார். 1913 ஆம் ஆண்டு சுசீலா வாக்குரிமை இயக்கத்தின் ஒரு கிளை தலைவரானார். [4] முதலாம் உலகப் போரின்போது, பிரிசுடலில் உள்ள ஒரு மருத்துவமனையில் இவருக்கு அறுவை சிகிச்சை நிபுணராக தற்காலிக பதவி வழங்கப்பட்டது. [2] இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே மருத்துவம் கற்பிக்கவும், பெண்களின் கல்விக்காக நிதி திரட்டவும் 1920 ஆம் ஆண்டு இறக்கும் வரை தொடர்ந்து பயணம் செய்தார். [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Susila Anita Bonnerjee". Making Britain: Croyden. பார்க்கப்பட்ட நாள் 2020-10-15."Susila Anita Bonnerjee". Making Britain: Croyden. Retrieved 2020-10-15.
  2. 2.0 2.1 2.2 2.3 "Newly-discovered photograph highlights the role of Indian suffragists – Newnham's Dr Susila Bonnerjee (NC 1891) – Newnham College". www.newn.cam.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2020-10-15."Newly-discovered photograph highlights the role of Indian suffragists – Newnham's Dr Susila Bonnerjee (NC 1891) – Newnham College". www.newn.cam.ac.uk. Retrieved 2020-10-15.
  3. Majumdar, Janaki Agnes Penelope (2003). Family History. https://books.google.com/books?id=FhNuAAAAMAAJ&newbks=0&printsec=frontcover&dq=Janaki+Majumdar+family+history&q=Janaki+Majumdar+family+history&hl=en. 
  4. Science, London School of Economics and Political. "Unearthed photograph highlights important role of Indian suffragettes". London School of Economics and Political Science (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசீலா_அனிதா_பானர்சி&oldid=3282172" இலிருந்து மீள்விக்கப்பட்டது