சுசுமிதா ரூஜ்

சுசுமிதா ரூஜ் (Sushmita Ruj) ஓர் இந்திய-ஆத்திரேலிய கணினி அறிவியலாளர் ஆவார். இவருடைய ஆராய்ச்சி அணுகல் கட்டுப்பாடு, கணினி பாதுகாப்பு மற்றும் தகவல் தனியுரிமை பற்றியது. இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் இணைப் பேராசிரியராகவும், ஆத்திரேலியாவில் பொதுநலவாய அறிவியல்[1]:{{{3}}} மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சி அறிவியலாளராக இருந்தவர்.[2]:{{{3}}} இவர் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் மூத்த விரிவுரையாளர் ஆவார்.[3]:{{{3}}}

கல்வி

தொகு

ரூஜ் 2004-இல் பெங்கால் பொறியியல் கல்லூரியில் (தற்போது இந்திய பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ஷிப்பூர்) கணினி அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றார்.[1]:{{{3}}} இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் 2006-இல் கணினி அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். மேலும் தனது முனைவர் பட்ட ஆய்வினை இங்கு 2010-இல் உணர்வி வலையமைப்பு நெட்வொர்க்குகள் மற்றும் துரோகிகளைக் கண்டுபிடிப்பதில் முக்கிய விநியோகத்திற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்புகளின் பயன்பாடு எனும் தலைப்பில் பிமல் குமார் ராய் மேற்பார்வியில் முடித்தார்.[1]:{{{3}}}[4]:{{{3}}}

லுண்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆராய்ச்சிக்குப் பிறகு, ரூஜ் 2012-இல் இந்தூரில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உதவிப் பேராசிரியராக சேர்ந்தார். மேலும் 2013-இல் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் சேர்ந்தார். பொதுநலவாய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம்[1]:{{{3}}} மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் செல்வதற்கு முன்பு இணைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.[3]:{{{3}}}

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Curriculum vitae (PDF), பார்க்கப்பட்ட நாள் 2019-09-24
  2. Dr Sushmita Ruj: Senior Research Scientist, CSIRO, archived from the original on 2021-05-09
  3. 3.0 3.1 "Ms Sushmita Ruj", Find a researcher, University of New South Wales, பார்க்கப்பட்ட நாள் 2022-07-08
  4. கணித மரபியல் திட்டத்தில் சுசுமிதா ரூஜ்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசுமிதா_ரூஜ்&oldid=3886948" இலிருந்து மீள்விக்கப்பட்டது