சுட்டாங்கல்

(சுட்டாங்கல் (பீங்கான்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுட்டாங்கல் அல்லது பீங்கான் (ceramic) ஒரு மாழையல்லாத கனிமச் சேர்மத்தாலான திடப் பொருளாகும். இது மிகுதியான வெப்பப்படுத்தல் மற்றும் தொடர்ச்சியான குளிர்வித்தல் வினையால் செய்யப்படுகிறது. சுட்டாங்கல் பொருட்கள் படிக மற்றும் குறைபடிக அமைப்பு (எ.கா. பீங்கான்) கொண்டவையாகவோ அல்லது துகளமைப்பு (எ.கா. ஆடிகள்) கொண்டவையாகவோ இருக்கக் கூடும்.[1][2][3]

18ம் நூற்றாண்டின் சீன குயிங் பேரரசைச் சார்ந்த ஒரு சுட்டாங்கற் பாண்டம்
சுட்டாங்கற்களால் வெப்பக்காப்பு செய்யப்பட்ட சுடுகலன்.

மிகப் பழமையான சுட்டாங்கற்கள், களிமண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்கள் ஆகும். இவை நெருப்பினால் சுட்டு உறுதிப்படுத்தப்பட்டன. தற்காலங்களில், சுட்டாங்கற்கள் வீட்டு பயன்பாட்டு பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் சுட்டாங்கற்களை பல புதிய துறைகளில் பயன்படுத்தத் துவங்கினர். எடுத்துக்காட்டாக, இவை மேம்பட்ட சுட்டாங்கல் பொறியியலிலும், குறைமின்கடத்திகள் செய்வதற்கும் பயன்படுகின்றன.

சுட்டு செய்யப்படுவதன் பொருட்டு சுட்டாங்கல் எனப் பெயர்பெற்ற இவை ஆங்கிலத்தில் செராமிக்ஸ் (ஆங்கிலம்:Ceramics) என அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Heimann, Robert B. (16 April 2010). Classic and Advanced Ceramics: From Fundamentals to Applications, Preface. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527630189. Archived from the original on 10 December 2020. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  2. "ceramic". The Free Dictionary. Archived from the original on 2020-08-03. பார்க்கப்பட்ட நாள் 2020-08-03.
  3. Carter, C. B.; Norton, M. G. (2007). Ceramic materials: Science and engineering. Springer. pp. 20, 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-46271-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுட்டாங்கல்&oldid=4107029" இலிருந்து மீள்விக்கப்பட்டது