சுதர்சன் குமார் பிர்லா
சுதர்சன் குமார் பிர்லா (Sudarshan Kumar Birla) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபராவார். [1][2] எச். கே. பிர்லா (பிறப்பு 1934) என்ற பெயராலும் அறியப்படுகிறார். 1934 ஆம் ஆண்டில் இந்தியாவின் தொழில்துறையும் சமூக வரலாறும் இணைந்த பிர்லா குடும்பத்தில் இவர் பிறந்தார். ஒரு தொழிலதிபராகவும் பிர்லா குடும்பத்தின் மூத்த உறுப்பினராகவும் இவர் கருதப்படுகிறார். [3] திக்சாம் விஜய் வூல் தொழிற்சாலை , மைசூர் சிமென்ட்டு, பிர்லா ஈசுடர்ன், நபின் தொழிற்சாலை , எக்சுப்ரோ இந்தியா போன்ற பல நிறுவனங்களைக் கொண்டிருந்த எசு. கே. பிர்லா குழுமத்திற்கு அவர் தலைமை தாங்குகிறார்.[1][4] இலட்சுமி நிவாசு பிர்லாவின் மகனும், ஜி. டி. பிர்லாவின் மூத்த பேரனும் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். [3][5] எசு. கே. பிர்லா குழுமத்தில் கட்டுப்பாட்டு பங்குகளை அவர் தொடர்ந்து வைத்திருந்தாலும், 2010 ஆம் ஆண்டில் குழுமத்தின் பொறுப்பை தனது மகன் சித்தார்த் பிர்லாவிடம் வழங்கினார். 1990 ஆம் ஆண்டு இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவராகவும் பணியாற்றினார்.[6][1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "S K Birla, Business Photo, S K Birla, Chairman of S K Bir..." www.timescontent.com. பார்க்கப்பட்ட நாள் 12 September 2022.
- ↑ Shirur, Srinivas (2005). Strategic Alternatives for Family Business Houses (in ஆங்கிலம்). Deep & Deep Publications. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7629-652-6. பார்க்கப்பட்ட நாள் 12 September 2022.
- ↑ 3.0 3.1 Hindustan Year-book and Who's who (in ஆங்கிலம்). M. C. Sarkar. 2005. p. 27. பார்க்கப்பட்ட நாள் 12 September 2022.
- ↑ Shirur, Srinivas (2005). Strategic Alternatives for Family Business Houses (in ஆங்கிலம்). Deep & Deep Publications. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7629-652-6. பார்க்கப்பட்ட நாள் 12 September 2022.
- ↑ O'Brien, Derek (August 2010). Penguin-CNBC TV18 Business YRBK10 (in ஆங்கிலம்). Penguin Books India. p. 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341419-3. பார்க்கப்பட்ட நாள் 12 September 2022.
- ↑ "FICCI Past Presidents". ficci.in. பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.