சுதிர் உத்தம்லால் மேத்தா

சுதிர் உத்தம்லால் மேத்தா (Sudhir Mehta) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கோடீசுவர தொழிலதிபர் ஆவார். இவர் 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். சகோதரரான சமீர் உடன் இணைந்து அகமதாபாத்தை தலைமை இடமாகக் கொண்ட டோரண்ட்டு என்ற நிறுவனத்தை இயக்கி வருகிறார். இந்நிறுவனம் அவருடைய மறைந்த தந்தை யூ.என்.மேத்தாவால் 1959 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாகும். சுதிர் மேத்தா மற்றும் சமீர் மேத்தா சகோதரர்களின் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத கணக்கெடுப்பின்படியான நிகர சொத்து மதிப்பு $7.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் [2]என மதிப்பிடப்பட்டுள்ளது.

சுதிர் மேத்தா
Sudhir Mehta
சுதிர் மேத்தா, 2024 உருவப்படம்
பிறப்புசுதிர் உத்தம்லால் மேத்தா
1954 (அகவை 69–70)[1]
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்குசராத்து பல்கலைக்கழகம்
பணிவணிகர்
பட்டம்தலைவர், டோரண்ட்டு குழுமம்
பெற்றோர்யு.என். மேத்தா
பிள்ளைகள்2
உறவினர்கள்சமீர் மேத்தா, (சகோதரர்)


ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

மேத்தா, ஒரு குஜராத்தி ஜெயின் குடும்பத்தில் 1954[3] பிறந்தார் தன்னுடைய இளங்கலை பட்டத்தை குஜராத் பல்கலைக்கழகத்தில்[4] படித்து பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

மேத்தாவுக்கு, இயினல் மற்றும் வருண் என இரு மகன்கள் உள்ளனர். இயினல் மேத்தா டோரண்ட்டு பவர் நிறுவனத்திற்கு இயக்குநராக உள்ளார். [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sudhir Mehta | Ahmedabad University". Ahduni.edu.in. பார்க்கப்பட்ட நாள் 13 April 2017.
  2. "Forbes profile: Sudhir & Samir Mehta". Forbes. பார்க்கப்பட்ட நாள் 1 September 2021.
  3. "Top 10 Gujarati billionaires". India TV News. 2015-08-01. https://www.indiatvnews.com/business/india/top-10-gujarati-billionaires-3732.html?page=5. 
  4. "List of Public Companies Worldwide, Letter - Bloomberg - Bloomberg". Investing.businessweek.wallst.com. பார்க்கப்பட்ட நாள் 13 April 2017.
  5. "Torrent brothers divide business between the two promoter brothers - The Economic Times". Economictimes.indiatimes.com. 10 May 2014. பார்க்கப்பட்ட நாள் 13 April 2017.