சுதிர் சக்ரவர்த்தி

சுதிர் சக்ரவர்த்தி(Sudhir Chakravarti) (19 செம்டம்பர் 1934- 15 திசம்பர் 2020) ஒரு வங்காள கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். வங்காள நாட்டுப்புறவியல் கலாச்சாரம் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சித்துறையில் இவர் பெரும்பங்காற்றியுள்ளார். சக்ரவர்த்தி காலனிய உரைநடையின் தன்மையை மண்சார்ந்த நடையில் மாற்றியமைத்தவர் ஆவார். இவர், ஆழமானவற்றையும் தனது நகைச்சுவை கலந்த எழுத்து நடை மூலம் விளங்கவைக்கும் தனித்தன்மை பெற்றிருந்தார்.

Sudhir Chakravarti
பிறப்பு(1934-09-19)19 செப்டம்பர் 1934
Shibpur, Bengal Presidency, British India
இறப்பு15 December 2020 (aged 86)
Kolkata, West Bengal
தொழில்இலக்கிவாதி, கல்வியாளர், இசை வல்லுநர்
மொழிவங்காளம், இந்தியா
கல்வி நிலையம்இளங்கலை,கிருஷ்ணாநகர் அரசு கல்லூரி, முதுகலை - கல்கத்தா பல்கலை,முனைவர் பட்டம்- ஜாதவ்பூர் பல்கலை
குறிப்பிடத்தக்க படைப்புகள்
கபீர் நிர்ஜன் பதே

பால் ஃபகிர் கதா கணேர் லிலர் சேய் கினாரே

சதர் மஃபஸ்வால்
குறிப்பிடத்தக்க விருதுகள்ஆனந்த புரஸ்கர்
சாகித்ய அகாதமி
சிரோமணி விருது
ஆச்சார்யா தினேஷ் சந்திர சென் விருது
நரசிங்க தாஸ் பதக்கம்
சரோஜினி பாசு தங்கப் பதக்கம்
துணைவர்நிவேதிதா சக்ரவர்த்தி
பிள்ளைகள்சனந்தா சக்ரவர்த்தி Sreya Chakravarti
கையொப்பம்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பணி தொகு

சுதிர் சக்ரவர்த்தி அல்லது சுதிர் பிரசாத் 1934ம் ஆண்டு செம்டம்பர் 19ல் சிப்பூர் என்னும் ஊரில் பிறந்தார். ராம்பிரசாத் சக்ரவர்த்தி மற்றும் பீனாபணி சக்ரவர்த்தி இவரது பெற்றோர் ஆவர்.

சக்ரவர்த்தியின் குழந்தைப்பருவத்தில் கல்கத்தாவில் நடந்த சப்பானியர்களின் குண்டுவீச்சுகளால் இவரது முன்னோர் ஜமீ்ன்தார்களாக நிலங்களைக் கொண்டு இருந்த நாடியா மாவட்டத்தின் திக்நகர் பகுதிக்கு இவரது தந்தை குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அதன்பிறகு, நாடியா மாவட்டத்தின் கிருஷ்ணா நகர் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். [1][2] சக்ரவர்த்தி தன்னுடைய கல்வியை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முடித்தார். இவர், நாட்டுப்புறவியல் துறை , வங்காள பண்பாட்டு மானுடவியல் துறை சார்ந்த தனது ஆய்வுகளுக்காக அறியப்படுகிறார். இவர், 30 ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தில் பல்வேறு கிராமங்களுக்கும் பயணம் செய்து நாட்டுப்புற கலாச்சாரங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டார். [3] சக்ரவர்த்தி 1958 முதல் 1994 வங்காள இலக்கியத்தில் பேராசிரியராக பணியாற்றினார். பணிஓய்வுக்குப் பின்னரும் தனது பணியை 2011ம் ஆண்டு வரை தொடர்ந்தார். இவர் கிருஷ்ணா நகர் அரசு கல்லூரியில் பேராசிரியராகவும், ஜாதவ்பூர் பல்கலையில் கவுரவ விரிவுரையாளராகவும் பணியாற்றினார். இசை, கலை, நாட்டுப்புறவியல், பண்பாட்டு மானுடவியல், ஆகிய துறைகளில் 85க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். இவர் வங்காள இலக்கிய இதழான துருபதா என்னும் இதழின் ஆசிரியராகவும் இருந்தார். [4] 2020ம் ஆண்டு திசம்பர் 15ல், கொல்கத்தாவில் மரணம் அடைந்தார்.

இலக்கியப் பணி தொகு

இவர் ரபீந்தரநாத் தாகூர் முதல் லாலன் பாகிர் வரை, பாவுல் கலாச்சாரம் முதல் மண்பானை தயாரிப்பு வரை, வங்காள கிராமங்களின் ஓவியங்கள் என அனைத்தும் இவரது ஆய்வுப் பொருண்மையாக அமைந்தது. ஆராய்ச்சி மற்றும் எழுத்தைத் தவிர, அவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் இருந்தார்.12 இதழ்களைக் கொண்ட அவரது 'துருவபதா' பத்திரிகை வங்காள இலக்கிய சமூகத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

வங்காள நாட்டுப்புற கலாச்சாரம் பற்றிய ஆய்வுக்கு அவரது பங்களிப்பு மகத்தானது ஆகும். கர்தபாஜா, பலஹரி, சாஹேப்தானி, அவர்களின் நம்பிக்கை மற்றும் அவர்களின் பாடல்களின் உப-மதங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றிய மகத்தான விரிவான படைப்புகளை எழுதியுள்ளார். 18 ஆம் நூற்றாண்டில் வில்லியம் ஹண்டர் மற்றும் அக்ஷோய் குமார் தத்தா ஆகியோருக்குப் பிறகு, சிலர் மட்டுமே இந்த துறைகளில் ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது 'பிரத்ய லோகாயத் லாலன்' புத்தகம் லாலன் ஃபகிரின் நடைமுறை குறித்த பதிவுகளில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவர் வங்காளத்தின் கிராமங்களில் கடுமையான களப்பணி செய்து பல்வேறு சமூகங்களின் பாடல்களை சேகரித்தார். இது இவரை மற்ற ஆராய்ச்சியாளர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டியது. நாட்டுப்புறவியல் தொடர்பான தனது ஆராய்ச்சி அனுபவத்தை 'கபீர் நிர்ஜன் பாதே' (ஆழமான தனிமையான சந்துகளில்)' என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.சக்ரவர்த்தி 2002 இல் தனது 'பவுல் ஃபகிர் கோத்தா' புத்தகத்திற்காக ஆனந்தா விருதை வென்றார், மேலும் 2004 இல் அதற்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.

படைப்புகள் தொகு

1. சாஹிப்தானி சம்பிரதாய் ஓ டேடர் கான்

2. கேனர் லிலர் சேய் கினாரே, 1985

3. கிருஷ்ணகரர் மிருத்சில்போ ஓ மிருத்சில்பி சமாஜ், 1985

4. பலஹரி சம்பிரதாய் அல்லது தாடர் கான், 1986

5. கபீர் நிர்ஜன் பாதே, 1989

6. த்விஜேந்திரலால் ஸ்மரன் பிஸ்மரன், 1989

7. பங்களா கேனர் சந்தனே, 1990

8. சதர் -மஃபஸ்வால், 1990

9. அக்ராட்வைபர் கோபிநாத், 1992

10. நிர்ஜன் ஏகேகர் கான் ரவீந்திரசங்கீத், 1992

11. பங்களா கேனர் சார் திகந்தா, 1992

12. பிரத்ய லோகாயத லாலன், 1992

13. சல்சித்ரர் சித்ரலேகா, 1993

14. பங்களா ஃபிலிமர் கான் ஓ சத்யஜித் ரே, 1994

15. நிர்பாஸ் (निर्बास), 1995

16. பஞ்சகிராமர் கராச்சா, 1995

17. பச்சிம்பாங்கர் மேளா அல்லது மோஹோத்சவ், 1996

18. தேபப்ரதா பிஸ்வாசர் கான், 1997

19. லாலன் (লালন), 1998

20. மதி-பிரிதிபீர் தானே, 1999

21. பவுல் ஃபகிர் கதா, 2001

22. பங்களா கேனர் அலோக்போர்போ, 2001

23. கணே கணே காயோயா, 2003

24. பங்களார் கவுனதர்மா : சாஹேப்தானி ஓ போலஹரி, 2003

25. ரூப் பார்னே சண்டே, 2003

26. லேகா போரா கோரே ஜெ, 2003

27. உட்சபே, மெலே இதிஹேஸ், 2004

28. கனரன் பஹிரானா, 2006

29. கபிதர் விசித்ரா பாதே, 2006

30. கான் ஹோடே கானே, 2008

31. லோக்யோட்டர் அந்தர்மோஹோல், 2008

32. ஷாமுக் ஜினுக், 2009

33. அக்யானர் கோஜே, 2009

34. லோக்சோமாஜ் ஓ லோக்சித்ரா, 2009

35. ரவீந்திரநாத் அனேகந்தா, 2010

36. நிர்ஜன்சஜனே, 2011

37. அலல்தோஸ்ட் சேவகமாலினி லாலன், 2011

38. மனினி ருப்மதி குபீர் கோசாய், 2012

39. கபிதர் கோன்ஜே (கவிதைக்கான தேடல்), 2012

40. தேகா ந தேகயே மேஷா, 2012

41. சுதிர் சக்கரவர்த்தி ராசனாவலி -1, 2012

42. சுதிர் சக்கரவர்த்தி ராசனாவலி -2, 2013

43. சோறானா ஏய் ஜிப்பி,2013

44. பத்ராஜனர் ட்ரிஷ்டிட் லாலன் ஃபகிர், 2013

45. சாஹித்யர் லோகாயத பாதை, 2013

46. அனெக் டின்னர் அனெக் கதா, 2013

47. அபாடலர் ரூபாபாலி அபாடலர் படபாலி, 2013

விருதுகள் தொகு

  • பவுல் ஃபகிர் கதா புத்தகத்திற்காக 2002 இல் ஆனந்த புரஷ்கர் விருது.
  • 2004 இல் ஆண்டு சாகித்ய அகாதமி விருது [5]

2006 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ஆசிரியர் விருது [6]

  • தில்லி பல்கலைக்கழகத்தின் நரசிம்ம தாஸ் விருதிற்கான பதக்கம்
  • ஆசிய சங்கத்தின் டாக்டர் சுகுமார் சென் தங்கப் பதக்கம்
  • தாகூர் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய ரவீந்திரதத்வாச்சார்யா என்ற பட்டம்.

மேற்கோள்கள் தொகு

  1. "কোথায় গেল সে সব আশ্চর্য পড়শিরা". anandabazar.com (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.
  2. হালদার, সুস্মিত. "রোজ পৌঁছতেন কাঠিবনে". www.anandabazar.com (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2021-03-08.
  3. "Their music inspired Tagore, Bob Dylan: This book tells you all about Bauls of Bengal". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.
  4. "Dr. Sudhir Chakraborty". nadia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.
  5. "AKADEMI AWARDS (1955–2016)". sahitya-akademi.gov.in. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.
  6. "Recipient of Eminent Teacher Awards". பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதிர்_சக்ரவர்த்தி&oldid=3704555" இலிருந்து மீள்விக்கப்பட்டது