சுந்தர் சாம் அரோரா

இந்திய அரசியல்வாதி

சுந்தர் சாம் அரோரா (Sunder Sham Arora) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1958 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் , 2017 ஆம் ஆண்டில் ஓசியர்ப்பூர் தொகுதியில் போட்டியிட்டு பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊழல் வழக்குகளில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது இலஞ்ச ஒழிப்பு துறையினர் மூலம் கைது செய்யப்பட்டார்.[2]

சுந்தர் சாம் அரோரா
Sunder Sham Arora
பஞ்சாப் சட்டமன்றம்
பதவியில்
2017–2022
பின்னவர்திக்சன் சூது
தொகுதிஓசியர்ப்பூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சூன் 1958
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்ஓசியர்ப்பூர்
தொழில்அரசியல்வாதி

ஓசியார்பூர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக சுந்தர் சாம் அரோரா பொட்டியிட்டு வெற்றி பெற்றார். பஞ்சாப் சட்டப் பேரவையின் உறுப்பினரான பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் திக்சன் சூதை 11233 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் தோற்கடித்தார்.[3][4]

மேற்கோள்கள் தொகு

  1. "Members". punjabassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
  2. "Sunder Sham Arora(Bhartiya Janta Party(BJP)):Constituency- HOSHIARPUR(HOSHIARPUR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
  3. "2017 Hoshiarpur - Punjab Assembly Election Winner, LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
  4. "HOSHIARPUR Election Result 2017, Winner, HOSHIARPUR MLA, Punjab". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தர்_சாம்_அரோரா&oldid=3816049" இலிருந்து மீள்விக்கப்பட்டது